சினிமா செய்திகள்
அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

பாலிவுட் படமான பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு நேர்கொண்ட பார்வை என வித்தியாசமான தலைப்பை வைத்து ஃபர்ஸ்ட் லுக்கையும் படக்குழு ரிலீஸ் செய்துள்ளது.
அஜித் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் வைரலாக ஃபர்ஸ்ட் லுக்கை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய இளம் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிவரும் இந்த படத்தின் ஷூட்டிங், ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் கோர்ட் செட் போட்டு படமாக்கி வருகின்றனர்.
பாலிவுட் படமான பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் நடித்த ரோலில் அஜித்தும், டாப்சி நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் நடித்து வருகின்றனர்.



















