வணிகம்
ஊழியர்களுக்கு 15 நாள் தாமதமாக சம்பளம் அளிக்கும் ஏர் இந்தியா!

இந்திய போது துறை போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா ஜூலை மாத சம்பளத்தினை 15 தாமதமாக அளித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் சம்பளத்தினை தாமதமாக அளிப்பது இது ஒன்றும் முதன் முறையில்லலை. கடந்த 5 மாதமாகவே ஏர் இந்தியா தங்களது ஊழியர்கள்க்கு சம்பளத்தை தாமதமாக தான் அளித்து வருகிறது.
நட்டத்தில் இயங்கி வரும் இந்த நிறுவனத்தை சில மாதங்களுக்கு விற்க முயன்று மத்திய அரசு தோற்றுப்போனது விமர்சனத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் அளிக்க முடியாத நிலையில் நிர்வாகம் உள்ளது என்றும் அரசிடம் இருந்து நிதி கேட்டுள்ளதாகவும் செய்தி சுருள் தளத்துடன் ஏர் இந்தியா அதிகாரிகள் தகவல் பகிர்ந்துக் கொண்டனர்.



















