தமிழ்நாடு
ஆ ராசா பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் புகார்

தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ ராசா தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நேற்று திமுக தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் ஆ ராசா பேசிய போது ’நல்ல உறவில் சுகப்பிரசவமாக பிறந்தவர் ஸ்டாலின் என்றால் கள்ள உறவில் குறைப் பிரசவமாக பிறந்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்று பேசினார். அவரது பேச்சுக்கு திமுகவினர்களே கண்டனம் தெரிவித்தனர்
திமுக எம்பி கனிமொழி தனது டுவிட்டரில் இதுகுறித்து தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல்வர் குறித்து அவதூறாக பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது
ஆ ராசா மீது நடவடிக்கை எடுத்து அவரை பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


















