தமிழ்நாடு
சுயேட்சையாக போட்டியிட போகிறேன்: அதிமுக எம்.எல்.ஏ அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியானது என்பதும் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் கிட்டத்தட்ட வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அதிமுக திமுக உள்பட பல கட்சிகளில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத எம்எல்ஏக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக சுயேச்சையாக போட்டியிட்டும் மாற்றுக் கட்சிகளில் இணைந்து போட்டியிட்டும் வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததால் சேந்தமங்கலம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்து செய்துள்ளார். இவர் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அவரை சமாதானப்படுத்தும் வகையில் அதிமுக நிர்வாகிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவர் சமாதானமடைவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



















