சினிமா செய்திகள்
கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட எம்ஜிஆர் பட நாயகி!

நேற்று முதல் அடுத்த கட்ட கொரோனா தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டு வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை போட்டு வருகின்றனர்.
நடிகை ராதிகா, நடிகை வரலட்சுயின் தாயார் சாயா, கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் எம்ஜிஆர் நடித்த பல திரைப் படங்களில் நாயகியாக நடித்த நடிகை லதா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதேபோல் கமல் ரஜினி படங்களில் நடித்தவரும் தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய நிர்வாகியாக இருப்பவருமான ஸ்ரீப்ரியா கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் முன்னா கிரிக்கெட் வீரர் ரவிசாஸ்திரி உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்களும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
Let’s break the COVID chain pic.twitter.com/3rB6K4xxGV
— sripriya (@sripriya) March 1, 2021


















