உலகம்
திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் தலைமுடியை வெட்டிய மணமகள்.. வீடியோ வைரல்

திருமணத்திற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன் மணமகள் தனது தலைமுடியை வெட்டிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
திருமணம் என்பது வாழ்க்கையில் பலருக்கு ஒரே ஒரு முறை மட்டும் நடைபெறும் நிகழ்வு என்பதால் அந்த ஒரு நாளை நினைவு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சிறப்பாக அலங்காரம் செய்திருப்பார்கள் என்பது தெரிந்ததே. குறிப்பாக மணமகளின் சிகை அலங்காரம் முக்கியத்துவம் பெறும் என்பதும் விதவிதமான சிகை அலங்காரத்தில் திருமணத்தின்போது இருக்க வேண்டும் என்று அனைத்து பெண்களும் விரும்புவார்கள் என்பது தெரிந்ததே.
அந்த வகையில் மணப் பெண் ஒருவர் தனது திருமணத்திற்காக சிகை அலங்காரத்தை செய்த நிலையில் திடீரென தனது தலை முடியை வெட்ட இருப்பதாக அறிவித்தது அவருடைய உறவினர்கள் மற்றும் மணமகன் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவை வெளியிட்டு அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: எனது தலைமுடியை நான் புற்றுநோயாளிகளுக்கு தானம் செய்ய விரும்புவதால் தலை முடியை வெட்ட முடிவு செய்துள்ளேன். புற்றுநோயாளிகள் தலை முடி உதிர்வதால் ஏற்படும் பிரச்சனையை நான் பார்த்திருக்கிறேன். நான் எனது திருமண நாள் ஒரு அற்புதமான நாளாகவும், என்றென்றும் ஞாபகமான நாளாக இருக்க வேண்டும் என்பதற்காக இன்றைய நாளில் நான் என்னுடைய தலை முடியை புற்று நோயாளிகளுக்காக வெட்டி கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
அவருடைய அறிவிப்பைக் கேட்ட அவருடைய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் கண்ணீர் மல்க குறிப்பாக மணமகன் தனது வருங்கால மனைவிக்கு வாழ்த்து தெரிவித்து உன்னுடைய செயலால் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று கூறினார்.
மணமகளின் சமூகவலைதளத்தில் இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட்ஸ் பதிவு செய்துள்ளனர். புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு முடி உதிர்தல் என்பது எவ்வளவு சவாலானது என்று எனக்கு தெரியும் என்றும் நீங்கள் செய்தது மிகப்பெரிய காரியம் என்றும் ஒருவர் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
https://www.instagram.com/p/Cl9If-IDyYT/