சினிமா செய்திகள்
Meera Jasmine: மீண்டும் தமிழுக்கு வருகிறார் மீரா ஜாஸ்மின்..!

மலையாளம் மற்றும் தமிழில் அதிக படங்களில் நடித்தவர், மீரா ஜாஸ்மின். தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் அவர் நடித்துள்ளார். இந்நிலையில், 2014ல் அனில் ஜான் டைடஸ் என்பவரை திருமணம் செய்து, நடிப்புக்கு டட பாய் போட்டுவிட்டு துபாய்க்கு சென்று குடியேறினார்.
She’s back people!
Wishing the ever-charming #MeeraJasmine a very happy birthday🤩 After a decade she will grace our screens with her presence in #Vimanam ✈️Our Next Telugu – Tamil bilingual film in association with @KkCreativeWorks
And we know she will be better than ever❤️ pic.twitter.com/4ySTLVS2oB
— Zee Studios South (@zeestudiossouth) February 15, 2023
அங்கு, தற்போது சமூக வலைத்தளங்களில் தனது கிளாமர் போட்டோக்களை, வெளியிட்டு, புதுப்பட வாய்ப்பு வேட்டை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆ, மலையாளத்தில் வெளியான ‘மகள்’ என்ற படத்தில் டீன்ஏஜ் பெண்ணுக்கு அம்மாவாக நடித்த அவர், 10 வருடங் களில் களுக்குப் பிறகு தெலுங்கில் ‘விமானம்’ என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுகிறார். தற்போது அவருக்கு 41 வயது ஆகிறது. இந்நிலையில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் ‘விமானம்’ படத்தில் நடிக்கிறார். மீராவின் 40 வது பிறந்தநாளை முன்னிட்டு, ஜீ ஸ்டுடியோஸ் சவுத் ட்விட்டரில் நடிகை மீரா ஜாஸ்மினின் படத்துடன் இதை அறிவித்தது.
தமிழில் கடைசியாக அவர் ‘விஞ்ஞானி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இது கடந்த 2014ல் திரைக்கு வந்தது. 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்கும் மீரா ங்கு ஜாஸ்மின், இங்குள்ள சில இயக்குனர்களிடம், நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளார்.