சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயன் அடுத்த படத்தை மிஸ் செய்த ரெட் ஜெயண்ட்: முந்தி கொண்ட கோபுரம் பிலிம்ஸ்

திமுக ஆட்சி ஆரம்பித்த கடந்த 10 மாதங்களில் பெரும்பாலான மாஸ் நடிகர்களின் திரைப்படங்களை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் பெற்று வருவதாக கோலிவுட்டில் ஒரு அதிருப்தி நிலவி வருகிறது.
குறிப்பாக ரஜினியின் அண்ணாத்த, அஜித்தின் வலிமை, விஜய்யின் ‘பீஸ்ட்’, கமல்ஹாசனின் விக்ரம், சிவகார்த்திகேயனின் டான், உள்பட அனைத்து முக்கிய படங்களையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் தமிழகத்தில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’எஸ்கே. 20’ என்று கூறப்படும் தமிழ் தெலுங்கு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மதுரை அன்பு செழியன் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த படத்தை எப்படி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மிஸ் செய்தது என்ற கேள்வி தற்போது கோலிவுட்டில் எழுப்பி வருகின்றனர்.
சிவகார்த்திகேயன், மரியா, பிரேம்ஜி, ராஷி கண்ணா, சத்யராஜ் உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்தை அனுதீப் இயக்கியுள்ளார். தமன் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தை சுரேஷ் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
Gopuram Cinemas is delighted to associate with @SVCLLP @SureshProdns @ShanthiTalkies for the Tamil Nadu theatrical rights of #SK20!????@Siva_Kartikeyan @anudeepfilm@MusicThaman @manojdft @SBDaggubati@Cinemainmygenes
@AsianSuniel#NarayanDasNarang @puskurrammohan@iamarunviswa pic.twitter.com/uYRbDaetnT— Gopuram Cinemas (@Gopuram_Cinemas) April 7, 2022


















