தமிழ்நாடு
ஏடிஎம் மிஷினில் பணம் வைத்த ஊழியரே திருடிய சம்பவம்: கடலூரில் பரபரப்பு!

கடலூர் அருகே ஏடிஎம் எந்திரத்தில் பணம் வைத்த ஒருவரே அந்த பணத்தை கொள்ளையடித்து எடுத்துச் சென்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் அருகே நேற்று இரவு 7 மணிக்கு நான்கு பேர் சேர்ந்து 7.5 லட்ச ரூபாய் பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில் வைத்துள்ளனர். அவர்களில் ஒருவர் வேண்டுமென்றே ஏடிஎம் சாவியை ஏடிஎம் மையத்தில் மறைத்து வைத்ததாகவும் அதன் பின்னர் நள்ளிரவு மீண்டும் வந்து அந்த சாவியை எடுத்து ஏடிஎம் மிஷினை திறந்து 7.5 லட்ச ரூபாயை கொள்ளையடித்ததாகவும் தெரிகிறது .
இது குறித்து காவல்துறையினர் விசாரித்தபோது சிசிடிவி கேமரா அணைக்கப் பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் ஏடிஎம் மையத்தில் பணம் வைத்த நான்கு பேர்களை போலீசார் விசாரித்த போது அவர்களில் கிருஷ்ணகுமார் என்பவர் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டார்.
இரவில் பணத்தை வைத்து விட்டு அதன் பின் நள்ளிரவில் மீண்டும் வைத்து வந்து பணத்தை கொள்ளை அடித்ததாக அவர் கூறினார். இதனை அடுத்து அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 7.5 லட்ச ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கிருஷ்ணகுமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரிடம் மேலும் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




















