தமிழ்நாடு
டாஸ்மாக் கடைகள் திறப்பதை தடுக்க பொதுமக்களுக்கு உரிமை: தமிழக அரசு சட்டதிருத்தம்!

டாஸ்மாக் கடைகளை மக்கள் நினைத்தால் தடுக்கலாம் என்ற வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக கோவில் மற்றும் பள்ளிகள் அருகே டாஸ்மாக் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் அமைவதை தடுப்பதற்கு பொது மக்களுக்கு உரிமை உண்டு என்றும் டாஸ்மாக் கடைகள் திறப்பதை பொதுமக்கள் நினைத்தால் தடுக்கலாம் என்றும் தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாஸ்மாக் கடைகளை திறக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட உள்ளதாக தமிழக அரசு கூறியிருப்பது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

















