கிசு கிசு
சிம்பு திருமண தேதி விரைவில் அறிவிப்பு?

நடிகர் சிம்பு திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.
நீண்ட காலமாக சிம்புவின் ரசிகர்கள் அவருக்கு எப்போது திருமணம் என கேள்வி கேட்டு வந்த நிலையில், அண்மையில் சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்த நிதி அகர்வால் கடந்த சில வாரங்களாகச் சிம்பு விட்டில் தங்கி வருகிறார்.

ஈஸ்வரன் படத்தில் நடித்ததிலிருந்து இருவருக்கும் நல்ல புரிதல்கள் உள்ளது. நிதி அகர்வால் ஹைதராபாத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சிம்புவின் தாயார் உஷா டி ராஜேந்தரும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். சிம்புவின் தங்கையும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவரைத் தான் திருமணம் செய்துள்ளார். எனவே விரைவில் திருமணம் ஆக வாய்ப்புள்ளது என கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் பிப்ரவரி 3-ம் தேதி 39 ஆகும் சிம்புவின் திருமணம் தேதி அன்றே அறிவிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
நிதி அகர்வால் வயது இப்போது 28 ஆகிறது. தமிழில் உதயநிதி ஸ்டாலினுடனும் தெலுங்கில் 2 படங்களிலும் நடித்து வருகிறார்.
சிம்பு மாநாடு என்ற பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல மற்றும் கொரோனா குமாரு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
சிம்புவின் பிறந்தநாள் அன்று இந்த 3 படக்குழுவினரிடம் இருந்தும் 3 அப்டேட்கள் வெளிவரலாம் எனவும் கூறப்படுகிறது.





















