சிம்புவின் புதிய காதலி?

சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தவர் நிதி அகர்வால்.

இந்தி படமான முன்னா மைக்கேல் படம் மூலம் அறிமுகம் ஆன நிதி அகர்வால் இப்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இந்தி படமான முன்னா மைக்கேல் படம் மூலம் அறிமுகம் ஆன நிதி அகர்வால் இப்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும், மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் நிதி அகர்வால் தன் நாயகி என கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் ஹீரொ, ஹரி ஹரா வீரா மாலு என்ற படத்திலும் நிதி அகர்வால் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சிம்பு - நிதி அகர்வாலுக்கு இடையில் ஈஸ்வரன் படத்தில் நடித்ததிலிருந்து காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இப்போது சென்னையில் நிதி அகர்வால் சிம்பு வீட்டில் தான் தங்குவதாகவும், அவர்கள் வீட்டில் நெருங்கிப் பழகி வருவதாகவும், விரைவில் திருமணம் அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.

சிம்புவும் நீண்ட காலமாகத் திருமணம் எப்போது என்று கேட்கும் போது எல்லாம் நழுவி வரும் நிலையில், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு முன்னதாக நயன்தாரா, ஷன்ஷிகா இருவரையும் காதலித்து பின்னர் பல்வேறு சர்ச்சைக்குப் பிறகு பிரிந்தார்.

நிதி அகர்வால் இந்திய கிரிக்கெட் வீரரான கே.எல்.ராகுலை சில ஆண்டுகளுக்கு முன்பு காதத்து வந்ததாகவும், பின்னர் திடீரென பிரேக்-அப் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

எப்படி இருந்தாலும் சிம்புக்கு விரைவில் கல்யாணம் என அவரது ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.