டிவி
ஆல்யா மானசா தயக்கம்.. ராஜா ராணி 2 சீரியலில் அதிரடி மாற்றங்கள்!

விஜய் டிவியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானஸா.
ராஜா ராணி சீரியலில் நடித்த போது தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்னும் சீரியல் நடிகரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இப்போது ஒரு குழந்தை உள்ளது.
தொடர்ந்து ஆல்யா மானசா ராஜா ராணி 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இரண்டாம் முறையாகக் கர்ப்பம் ஆகி உள்ளார் ஆல்யா மனசா. தான் கர்ப்பம் ஆகி இருப்பதை சீரியல் இயக்குநரிடம் எப்படிச் சொல்வது என்ற தயக்கத்திலிருந்து வந்துள்ளார் ஆல்யா.

அது குறித்து அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ள, ராஜா ராணி 2 மற்றும் பாரதி கண்ணம்மா சீரியலை இயக்கி வரும் ப்ரவின், “பாரதி கண்ணமா சீரியலில் இருந்து ரோஷினி விலகுவதாக அறிவித்து இருந்த நேரத்தில் புதிதாக ஒரு நடிகையைத் தேடி வந்தோம். மறுபக்கம் வென்பா கதாபாத்திரத்தில் நடித்த ஃபரினாவும் கர்ப்பமாக இருந்தார். அதை எல்லாம் சமாளிக்கும் வகையில் கதையில் மாற்றங்களைச் செய்து வந்தோம்.
அப்போது பணிச் சுமை அதிகமாக இருந்ததால், பல நேரங்களில் பரபரப்பாகவும், கோவமாகவும் இருந்தது வந்தேன். எனவே பல முறை என்னிடம் தான் கர்ப்பம் அடைந்ததைச் சொல்ல வந்து சொல்லாமல் திரும்பிச் சென்றுள்ளார்.
பின்னர் கண்ணம்மா கதாபாத்திரத்துக்குப் புதிதாக நடிகை தேர்வு செய்யப்பட்டு, ஷூட்டிங் தொடங்கிய பிறகு பிரச்சனைகள் குறைந்தன. அப்போது என்னிடம் தயக்குத்துடன் தான் கர்ப்பம் ஆனதை ஆல்யா தெரிவித்தார்.
ராஜா ராணி 2 சீரியலில் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற இவரது லட்சியத்தை அடைந்த பிறகே குழந்தை பெற்றுக்கொள்வது போன்று கதை வடிவமைக்கப்பட்டு இருந்தது. இப்போது அல்யா கர்ப்பமாக உள்ளதால், சீரியலிலும் கர்ப்பம் ஆகுவது போல கதையை மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறன. அவை சரியாக அமைந்தால் குழந்தை பெற்ற பிறகு அக்ஷன், ஐபிஎஸ் ஆகுவது போன்ற காட்சிகளுக்குத் திட்டமிட்டு வருவதாகவும்” இயக்குநர் பிரவின் கூறியுள்ளார்.
















