சினிமா செய்திகள்
தனிஒருவன் இரண்டாம் பாகம் பற்றிய தகவல் வெளியீடு!

ஜெயம் ரவி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தனிஒருவன் இந்த படத்தின் பார்ட் 2வை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
தனி ஒருவன் படம் ஜெயம் வாழ்க்கையில் மட்டுமல்லாமல் அவரது அண்ணன் மற்றும் அந்த படத்தின் இயக்குனரான மோகன் ராஜா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இந்த படத்தால் தமிழ் சினிமாவே பெருமை அடைந்தது. ஒரு சிறந்த போலீஸாக தனது நடிப்பை வெளிபடுத்தியிருப்பார் ஜெயம் ரவி. கதைக்கு ஏற்றவாரு இந்த படத்தில் ஹிப்ஆப் ஆதி இசையமைத்திருப்பார்.
தமிழ் சினிமாவில் ரீமேக் இயக்குனர் என்ற பெயர் பெற்ற மோகன் ராஜா இந்த படத்தின் மூலமாக தன்னால் சுயமாக கதை எழுதி இயக்கமுடியும் என நிறுபித்தார். மேலும் தான் இனிமேல் சுயமாக கதை எழுதுவேன் என்றும் கூறினார்.
இந்நிலையில் கடந்த வருடம் வேலைக்காரன் படத்தை இயக்கி வெற்றி கண்டார், ராஜா. தற்போது தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கபோகிறாராம், மோகன் ராஜா. இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் தொடங்கும் என கூறப்படுகிறது.














