வேலைவாய்ப்பு
2019-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியானது!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிவதற்கான டெட் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியராக பணிபுரிய டெட் முதல் தாளும், ஆறு முதல் எட்டம் வகுப்பு வரை பணிபுரிய டெட் இரண்டாம் தாளும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.
முன்னதாக ஆசிரியர் பணிக்கான இந்த தகுதித் தேர்வு 2017-ம் ஆண்டு நடைபெற்றது. அதில் பல முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த சிக்கல்கள் இன்று வரை தீரவில்லை.
இந்நிலையில் 2019-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கக் கடைசி தேதி 05/04/2019 என்று அறிவித்துள்ளனர். ஆனால் தேர்வு எப்போது நடைபெறும் என்று விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் 15/03/2019 முதல் கிடைக்கும். தேர்வு குறித்த முழு விவரங்களுக்கு இந்த இணைப்பிற்குச் செல்லவும்: http://http//trb.tn.nic.in/TET_2019/tett2019.pdf

















