இந்தியா
நீட் தேர்வை ரத்து செய்ய கோரிய மனுதாரரின் வழக்கறிஞருக்கு அபராதம்: எத்தனை லட்சம் தெரியுமா?

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்த மனுதாரரின் வழக்கறிஞருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது என்றும் தொழில்நுட்ப உதவியால் பல்வேறு முறைகேடுகள் நடந்தது என்றும் அதனால் இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை இன்று நடந்தது
மனுதாரர் மற்றும் மனுதாரரின் வழக்கறிஞர் ஆகியோர்களுக்கு நீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்தது. 7 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ள ஒரு தேர்வை 5 எப்.ஐ.ஆர் மட்டுமே பதிவாகி இருப்பதை வைத்து அந்த தேர்வு ரத்து செல்லாது என நீதிமன்றம் அறிவிக்காது என்பது உங்களுக்கு தெரியாதா என வழக்கறிஞரைப் பார்த்து நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்
இந்த மனுதாரர் தன்னை ஏதோ சாகசக்காரர் என நினைத்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் என்றும் இந்த மனுவை தாக்கல் செய்தவரைவிட இந்த மனுவை தாக்கல் செய்தால் நீதிமன்றம் அபராதம் விதிக்கும் என்று கூட தெரியாத அளவுக்கு வழக்கறிஞர் இருக்கிறாரா? என்றும் மனுதாரரின் வழக்கறிஞருக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்
மேலும் இந்த மனுவை தாக்கல் செய்ததற்காக ரூபாய் 5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது என்றும் அந்த அபராதத்தை மனுதாரரின் வழக்கறிஞர் தான் கட்ட வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். இதனை அடுத்து வழக்கறிஞர் தனது தவறை புரிந்து அபராதத்தை மட்டும் ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டதை அடுத்து அபராதத்தை ரத்து செய்வதாக நீதிபதி தெரிவித்தார்.






