இந்தியா
இந்த ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் இல்லை: சிபிஎஸ்இ அறிவிப்பு!

கொரோனாவால் பெற்றோரை இழந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு தேர்வு கட்டணம் இல்லை என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவ மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகிறது என்பது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் சிபிஎஸ்இ இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலையில் தீவிரம் குறைந்து வருவதைத் தொடர்ந்து பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி தற்போது குறிப்பிட்ட வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளிப் படிப்பைத் தொடர அரசு சார்பில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு நடப்பாண்டில் தேர்வு கட்டணம் வசூலிக்கப்படாது என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இந்த கட்டண சலுகை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

















