செய்திகள்
நான் தற்கொலை செய்து கொள்வேன் – நீதிபதியிடம் கதறிய மீராமிதுன்…

பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை மீராமீதுன் நீதிமன்றத்தில் போலீசார் தன்னை தற்கொலைக்கு தூண்டுவதாக தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான மீராமிதுன் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில் பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அதனை அடுத்து அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கேரளாவில் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தனர். ஆகஸ்டு 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற காவல் முடிந்த 27ம் தேதி மீண்டும் மீராமிதுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பின் அவரது காவலை செப்டம்பர் 9-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் வேறு சில வழக்குகளிலும் மீராமிதுன் கைது செய்யப்பட்டார்.ஜோ மைக்கேல் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே, முந்தைய வழக்குகளில் ஜாமின் கிடைத்தாலும் வெளியே வர முடியாமல் மீராமிதுன் தவித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று அவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீசார் தன்னை டார்ச்சர் செய்வதாகவும், பொய் வழக்குகள் போட்டு போலீசார் தன்னை தற்கொலைக்கு தூண்டுவதாகவும் கதறி அழுதார். அதற்கு ‘உங்கள் மீது காரணத்தோடுதான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்’ என நீதிபதி தெரிவித்தார். 3 வழக்குகளில் மீராமிதுனுக்கு ஜாமின் கிடைத்தாலும் முதலில் பதியப்பட்ட வன்கொடுமை வழக்கில் அவருக்கு ஜாமின் கிடைக்காததால் அவரால் விடுதலை ஆகமுடியவில்லை. எனவே, மீராமிதுன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.



















