பிற விளையாட்டுகள்
இந்தியாவுக்கு இரண்டாவது வெள்ளிப்பதக்கம்: சாதித்த இந்திய வீரர்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே இந்தியாவிற்கு ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளதாக வெளிவந்துள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பவினாபென் பட்டேல் அவர்கள் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்ற செய்தியை இன்று காலையில் பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் நிஷத் குமார் மிக அபாரமாக 2.06 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை பெற்றார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற நிஷத்குமார் அவர்களுக்கு பிரதமர் மோடி உள்பட பல அரசியல் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மேலும் சில பதக்கங்களை இந்தியா பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.




















