தமிழ்நாடு
உயரும் கடல்நீர் மட்டம் சென்னை, தூத்துக்குடிக்கு ஆபத்து- நாசா அறிக்கை

கடல்நீர் மட்டம் உயர்ந்து வருவது சென்னை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஆபத்து என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிக்கை வெளியிட்டுள்ளது.

பருவநிலை மாற்றங்களால் தொடர்ந்து உலகின் பல பகுதிகளிலும் அதிகப்படியான மழைப்பொழிவு, வெள்ளம், நிலநடுக்கம் ஆகியன தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்த சூழலில் பருவநிலை மாற்றங்களால் கடல் நீர் மட்டம் எந்தளவு உயர்ந்து வருகிறது என்பது குறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலகில் உள்ள கடல் ஓர நகரங்கள் பலவற்றுக்கும் கடல்நீர் மட்டம் உயர்வதால் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது என்று நாசா எச்சரித்துள்ளது. அப்படி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவைச் சேர்ந்த சென்னை, தூத்துக்குடி, மும்பை, கொச்சி, விசாகப்பட்டினம் என 12 நகரங்களுக்கு கடல் நீர் மட்டம் உயர்வதால் பெரும் ஆபத்து உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், 2100-ம் ஆண்டுக்குள் இந்த 12 நகரங்களும் கடல் நீருக்குள் மூழ்கிவிடும் என்றும் இந்த ஆய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.


















