சினிமா செய்திகள்
2.0 உரிமத்தை கைப்பற்றிய புலிமுருகன் தயாரிப்பாளர்!

ஷங்கரின் பிரம்மாண்ட படமான 2.0 திரைப்படத்தின் கேரள உரிமையை புலிமுருகன் தயாரிப்பாளர் கைப்பற்றியுள்ளார்.
லைகா நிறுவனம் 500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரித்துள்ள 2.0 திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் ஹீரோ அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வரும் நவம்பர் 29ஆம் தேதி உலகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் 2.0 ரிலீசாகவுள்ள நிலையில், இப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை மோகன்லாலை வைத்து புலிமுருகன் எனும் பிளாக்பஸ்டர் படத்தை தயாரித்த தோமிச்சன் முலக்குப்பாடம் கைப்பற்றியுள்ளார்.
சுமார் 14 கோடிக்கு இவரது முலக்குப்பாடம் பிலிம்ஸ் 2.0வை வாங்கி கேரளா முழுவதும் ரிலீஸ் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்தின் விவேகம் திரைப்படத்தையும் கேரளாவில் வெளியிட்டவர் இவரே என்பதும் குறிப்பிடத்தக்கது.






















