தமிழ்நாடு
சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவரின் எரிந்த உடல்: கொலையா? தற்கொலையா?

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் ஒருவரின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஐஐடி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவரின் மரணம் கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை ஐஐடி வளாகத்தில் ஏற்கனவே ஒரு சில மாணவர்கள் மர்மமான முறையில் இறந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை ஐஐடி வளாகத்தில் பாத்திமா லத்தீப் என்ற மாணவியின் மரணம் நாட்டையே உலுக்கியது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று சென்னை ஐஐடி வளாகத்தில் ஆராய்ச்சி மாணவரான கொச்சியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவர் உடல் கருகி மரணம் அடைந்த நிலையில் அவருடைய உடல் கைப்பற்றப்பட்டுள்ளது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் உன்னிகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இறந்த மாணவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.
சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் ஒருவர் எரிந்த நிலையில் மரணம் அடைந்திருக்கும் சம்பவம் மற்ற மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை சேர்ந்த உதவி பேராசிரியர் ஒருவர் சாதி ரீதியான பாகுபாடு இருப்பதால் தான் ராஜினாமா செய்வதாக நேற்றுதான் இமெயில் மூலம் கடிதம் எழுதி இருந்த நிலையில் அதே நாளில் இந்த தற்கொலை சம்பவம் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




