இந்தியா
‘மாட்டு மூத்திரம் குடித்தால் கொரோனாவுக்கு டாட்டா..!’- தானும் பருகி மக்களுக்கு அட்வைஸ் சொன்ன பாஜக எம்.எல்.ஏ

இந்திய அளவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தேசிய அளவில் ஒரு நாள் பாதிப்பு 4 லட்சத்தைக் கடந்து வருகிறது. பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களில் அதிக கட்டுப்பாடுகள் கொண்ட முழு ஊரடங்கு உத்தரவுகளை அமல் செய்து வருகிறது.
கடந்த மே 1 ஆம் தேதி முதல் நாட்டில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தொடங்கியுள்ளது. ஆனால், பல மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இருப்பே இல்லை. இதனால் தடுப்பூசி போடும் திட்டத்தில் பெரும் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது.
#WATCH | BJP MLA Surendra Singh in UP’s Ballia claimed drinking cow urine has protected him from coronavirus. He also recommended people to ‘drink cow urine with a glass of cold water’. (07.05)
(Source: Self made video) pic.twitter.com/C9TYR4b5Xq
— ANI UP (@ANINewsUP) May 8, 2021
இந்நிலையில் பலரை அதிர வைக்கும் அளவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ-வான சுரேந்திர சிங், மாட்டு மூத்திரத்தைக் குடித்தால் கொரோனா தொற்று வராது என்று கூறியுள்ளார்.
வெறுமனே சொல்வது மட்டுமல்லாமல் மாட்டு மூத்திரத்தைக் குடிக்கும் காணொலி ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் கொரோனா தொற்றிலிருந்து விடுபட மக்களும் மாட்டுக் கோமியம் குடிக்கும்படி சர்ச்சைக்குரிய வகையில் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.















