தமிழ்நாடு
எதிர்க்கட்சி தலைவர் யார்? முடிவு எட்டப்படாததால் கூட்டம் ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்றதை அடுத்து எதிர்க் கட்சியாக மாறியுள்ளது. இந்த நிலையில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டது.
ஆனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் தான் எதிர்கட்சி தலைவராக வேண்டும் என குரல் கொடுத்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் மட்டும் நிர்வாகிகள் கூட்டம் கூடியது.
இந்த கூட்டத்தில் அதிமுக தேர்தல் தோல்விக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஓபிஎஸ் தான் எதிர்கட்சி தலைவராக வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.
இதனால் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்வு செய்யப்படாமலேயே கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. வரும் திங்கட்கிழமை மீண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்றும் அன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் குறித்த தேர்வு நடைபெறும் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



















