சினிமா செய்திகள்
ஓவியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பாலாஜி முருகதாஸ்!

நடிகையும் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான ஓவியா நாளை தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில் அவருக்கு இன்றே தனது அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
’இனிமையான பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஓவியா அக்கா’ என்று அவர் பதிவு செய்துள்ளதை அடுத்து நெட்டிசன்கள் காமெடியான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். ஓவியாவை அக்கா என அழைத்ததை அடுத்து நீங்களும் ஓவியா ஆர்மியா? என்றும் கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன
பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளர்களாக இருந்த ஓவியாவின் ரசிகர் தான் என்று பாலாஜி முருகதாஸ் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஓவியாவுக்கு தான் முதன்முதலில் ஆர்மி தொடங்கப்பட்டது என்பதும் அந்த ஆர்மி இன்றுவரை ஆக்டிவ்வாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
Advance Happy birthday my dear Akka@OviyaaSweetz
Stay happy stay blessed #cdp #Oviya pic.twitter.com/PNnJVhEOdK— Balaji Murugadoss (@OfficialBalaji) April 28, 2021
ஓவியாவுக்கு அவருடைய ரசிகர்கள் தொடர்ச்சியாக வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் பாலாஜி முருகதாசும் வாழ்த்து தெரிவித்தது அனைவருக்கும் சற்று ஆச்சரியம் தான் என்றாலும் தற்போது பாலாஜி முருகதாஸ்க்க்கு தனது நன்றிகளை ஓவியா ஆர்மியினர் தெரிவித்து வருகின்றனர்.

















