தமிழ்நாடு
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கா? பெரும் பரபரப்பு

தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்ற செய்தி இணையதளங்களில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி வருகிறது. நேற்று 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஏழு ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட மூத்த அமைச்சர்களுடனும், சுகாதாரத்துறை அதிகாரிகளுடனும் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையின் போது ஊரடங்கு அமல் படுத்துவது குறித்தும், பிளஸ் டூ தேர்வு ரத்து செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்றும் இந்த ஆலோசனை முடிந்தவுடன் முக்கிய அறிவிப்புகள் முதல்வரால் வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்படுகின்றன.
தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே காபந்து அரசாக மாறியிருந்தலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த முக்கிய அறிவிப்புகளை எடுக்கலாம் என்பதால் இது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஏற்கனவே ஒரு சில ஒருவேளை ஊரடங்கு அமல்படுத்தாவிட்டால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்று செய்தி வெளிவந்தாலும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் வரை பொறுமை காப்போம்.



















