தமிழ்நாடு
தமிழகம், கேரளா உள்பட 5 மாநில தேர்தல் தேதி: இன்று அறிவிக்க வாய்ப்பு!

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் வரும் மே மாதம் தேர்தல் நடத்தப்பட இருக்கும் நிலையில் இன்று தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்காளம், மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் மே மாதத்துடன் சட்டசபை காலம் முடிவடைகிறது. இதனை அடுத்து ஏப்ரல் இறுதியில் இந்த ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அது மட்டுமின்றி தமிழகத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காலியாக இருப்பதால் அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் இன்று தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அவர்கள் ஆலோசனை செய்ய வருவதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்து ஐந்து மாநில தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டு விட்டால் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது























