வேலைவாய்ப்பு
புழல் பெண்கள் தனிச்சிறையில் பெண் மனநல ஆலோசகர் வேலைவாய்ப்பு!

புழல் பெண்கள் தனிச்சிறையில் மதிப்பூதியத்தின் அடிப்படையில் ஒரு மனநல ஆலோசகர் (பெண்) பணியிடம் காலியாக உள்ளது. இப்பணியிடத்திற்குக் கீழ் காணும் தகுதிகளும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி: Master degree in Sociology / Psychology / Social Work – தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
அனுபவம்: Counsell experience in Mental Health Institutions or Community Service
இட ஒதுக்கீடு: பொது வகுப்பினர் (General Turn-Women)
வயது வரம்பு: 01/07/2020 அன்றைய தேதியின் படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். SCA, SC, ST பிரிவினர் அதிகபட்சமாக 35 வயது நிரம்பியிருக்க வேண்டும். BC & MBC வகுப்பினர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். OC பிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஊதிய விகிதம்: ரூ.15,000/- (மதிப்பூதியம்)
தகுதியுள்ள மேற்குறிப்பிட்ட வகுப்பினர் மட்டும் கீழ் கண்ட முகவரிக்கு கீழ்க்காணும் ஆவணங்களின் நகல்களுடன் 16/12/2020-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:
1) சாதிச் சான்றிதழ்
2) குடும்ப அட்டை
3) முன்னுரிமை பெற்றதற்கான சான்றிதழ்
4) பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று
5) கல்வி சான்றுகள்
6) ஆதார் அட்டை
7) முன் அனுபவ சான்று
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
சிறை கண்காணிப்பாளர்,
பெண்கள் தனிச்சிறை,
புழல், சென்னை – 66



















