Connect with us

இந்தியா

1 லட்சம் பேருக்கு வேலை.. இந்தியர்களின் வயிற்றில் பால் வார்த்த ஃபாக்ஸ்கான் ..!

Published

on

இந்தியாவில் ஒரு லட்சம் பெயர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஃபாக்ஸ்கான் 700 மில்லியன் டாலர் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளதால் இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வேலை நீக்க நடவடிக்கையும் அதிகரித்து வருவதால் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் பெங்களூர் அருகே சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் ஆப்பிள் போன் உற்பத்தி தொழிற்சாலையை ஃபாக்ஸ்கான் நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக இந்நிறுவனம் 700 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாகவும் இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் மத்திய மின்னணு தகவல் மற்றும் தொழில்நுட்ப துறையின் இணை இயக்குனர் சந்திரசேகர் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

ஆப்பிள் நிறுவனம் உலக அளவில் தொழில்நுட்ப சாதனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது என்பதை தெரிந்ததே. ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான உற்பத்தியாளர் ஃபாக்ஸ்கான் என்றும் தைவானை தலைமையிடமாக கொண்டுள்ள இந்நிறுவனம் இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் தொழிற்சாலைகள் வைத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் புதிய தொழிற்சாலை அமைப்பது குறித்து ஃபாக்ஸ்கான் தலைவர் ஒரு குழுவை பெங்களூருக்கு அனுப்பி உள்ளார். இந்த குழு கர்நாடக மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரை சந்தித்து பேசி உள்ளதாகவும் இந்தியாவில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை அமைத்தால் அதற்கு கர்நாடக மாநில அரசு முழு ஒத்துழைப்பு தரும் என கர்நாடக மாநில தரப்பிலிருந்து உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் பெங்களூரில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை அமைந்தால் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் தெரிவித்துள்ளார். இது பெங்களூருக்கு மட்டும் இன்றி நாட்டில் உள்ள அனைவரது வேலை வாய்ப்புகளை பெருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத்துறையில் ல் வல்லுனர்களாக இருக்கும் பலரும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் விரைவில் வேலைக்கு சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா15 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா19 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்20 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா20 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
Cctv 解決方案 pos.