இந்தியா
பசுமை பட்டாசு மட்டும் வெடிக்கலாம்.. ஜகா வாங்கிய எடியூரப்பா!

கர்நாடகாவில் பட்டாசு விற்க மற்றும் வெடிக்கத் தடை விதித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டு இருந்தார்.
எடியூரப்பாவின் இந்த உத்தரவுக்கு மக்களிடையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை அடுத்து தனது முடிவிலிருந்து பின் வாங்கியுள்ளார் எடியூரப்பா.
அதன்படி கர்நாடகாவில் பசுமை பட்டாசுகள் மட்டும் விற்க, வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக டெல்லி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் பட்டாசு விற்க, வெடிக்கத் தடை விதித்து முதல்வர் எடியூரப்பா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டு இருந்தார்.
காற்று மாசு காரணமாகப் பல மாநிலங்களில் தீபாவளியின் போது பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காற்று மாசுவை குறைக்க வேண்டும் என்பதற்காக, உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் சென்ற ஆண்டு முதல் பசுமை பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.







