இந்தியா
#Breaking: பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு மக்களுக்கு உரையாற்றுவார் என அறிவிப்பு!

கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து பிரதமர் மோடி அறிவிப்பை வெளியிடுவார் என்று மக்கள், கடந்த சில நாட்களாக எதிர்பார்த்து வருகின்றனர்.
அதை உறுதி செய்யும் படி, நாளையுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில், நாளை காலை 10 மணியளவில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் டிவிட்டரில் தெரிவித்துள்ளது.
இதில், ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Prime Minister @narendramodi will address the nation at 10 AM on 14th April 2020.
— PMO India (@PMOIndia) April 13, 2020


















