Connect with us

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (அக்டோபர் 1 முதல் 6 வரை )

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம்:

கால புருஷ தத்துவத்தில் ஆறாவது ராசியாக விளங்கும் கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரம் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாக பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். கவனம் தேவை.

குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் மாறி சுமூகமான நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி அகலும். எதிர்பார்த்த அளவு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நன்மை தரும்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும்.

பெண்களுக்கு கை, கால்களில் வீக்கம் ஏற்படும். குடும்ப பிரச்சனைகளை பற்றி வெளியில் பேசாமல் இருப்பது உங்களுக்கு நன்மையைத் தரும்.

மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களை ஆசிரியர்கள் சுலபமாக தீர்த்து வைப்பார்கள். தீவிரமாக முயன்று நல்ல மதிப்ப்பெண்களை பெறுவீர்கள்.

பரிகாரம்:  மகாலட்சுமியை தீபம் ஏற்றி வணங்க பொருளாதார சிக்கல் தீரும். பணவரத்து கூடும். மனம் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்

**********************************************

ரிஷபம்:

கால புருஷ தத்துவத்தில் இரண்டாவது ராசியாக விளங்கும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் நீங்கள் நேரத்தின் மதிப்பை அறிந்தவர் சின்ன விஷயங்களுக்கு கூட உங்களுக்கு கோபம் வரலாம். எனவே கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்கள் சாதகமாக நடைபெறும். எதிர்பாராத பணதேவை உண்டாகும். அதனை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கக் கூடும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொழுதை களிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சைக்கேட்டு நடந்து கொள்வார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரத்தும் திருப்தி தரும். மேலிடம் உங்களிடம் நல்ல அணுகுமுறையை நீட்டிக்கும்.

பெண்களுக்கு அறிவுத் திறமையுடன் அதிகப் பாசத்துடனும் செயல் பட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.   பேச்சுகளை  மாற்றி பேசக் கூடிய சூழ்நிலை வரலாம்.

மாணவர்களுக்கு சக மாணவர்களிடன் பழகும் போது கவனம் தேவை. படிப்பில் கவனம் சிதறக் கூடிய விசயங்களை கவனமாக கையாளுங்கள்.

பரிகாரம்:  பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபட பயம் நீங்கி தைரியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

 

**********************************************

மிதுனம்:

கால புருஷ தத்துவத்தில் எட்டாவது ராசியாக விளங்கும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம் எதிர்ப்புகள் அகலும். பகை விலகி எதிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தகராறுகள் வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். வாழ்க்கை துணையின் உடல் நிலையில் நீடித்து வந்த ஆரோக்கிய குறைபாடு பூர்த்தியாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் இருந்த தாமதம் நீங்கும். வரவு இருந்த போதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் முதலீடு செலவு உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எண்ணப்படி எல்லாம் நடக்கும்.

பெண்களுக்கு உணர்ச்சிவசப்படாமல் எதையும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். கடின முயற்சியின் பேரிலேயே காரியங்கள் பெற்றி பெறும்.

மாணாக்கர்கள் கல்வியில் ஆழ்ந்து படிக்கக் கூடும். சக மாணவர்கள் தவறான பாதைக்கு அழைக்கக் கூடும். எதிலும் கவனமாக இருக்கவும்.

பரிகாரம்: ஆதிபராசக்தியை வழிபடுவது காரிய தடை களை நீக்கும். மன அமைதியை தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்

 

**********************************************

கடகம்:

கால புருஷ தத்துவத்தில் ஏழாவது ராசியாக விளங்கும் துலா ராசி அன்பர்களே இந்த வாரம் அறிவுத் திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் என்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம்.

திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை  சாதகமாக முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். பிள்ளைகளின் நலனின் அக்கறை காட்டுவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும். வாடிக்கையாளர்கள் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் டென்ஷனும் வீண் அலைச்சலும் இருக்கும். வீண் பகை உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.

பெண்களுக்கு  மனதில் தைரியம் ஏற்படும். சிக்கலான விசயங்களைக் கூட மிகச் சுலபமாக நடத்தி முடித்து விடுவீர்கள்.

மாணவர்களுக்கு துரிதமாக நடந்து கொண்டு ஆசிரியர்களின் ஆதரவும், பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள்.

பரிகாரம்: சனீஸ்வரபகவானை நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்கி வர எல்லா காரியங்களும் வெற்றியடையும். உடல் ஆரோக்கியம் பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்

 

**********************************************

சிம்மம்:

கால புருஷ தத்துவத்தில் ஐந்தாவது ராசியாக விளங்கும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். சுதந்திர எண்ணம் உண்டாகும். சின்ன சின்ன விஷயங்களில் கூட மனநிறைவு ஏற்படும்.

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். மகிழ்ச்சி உண்டாகும்

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் விவகாரங்களில் கொடுக்கல் வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. பொறுப்புகள் கூடும்.

பெண்களுக்கு சில சாதனைகளை படைக்க முடியும். தானாக முன் வந்து சிலர் உதவி புரிவார்கள். உடல்நிலையில் அக்கறை தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்ட தடைகள் அகலும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதை மனமுவந்து செய்வீர்கள். அது எதிர்காலத்திற்கு உதவும்.

பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர மனதில் தைரியம் கூடும். காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

 

**********************************************

கன்னி:

கால புருஷ தத்துவத்தில் ஒன்பதாவது ராசியாக விளங்கும் தனுசு ராசி அன்பர்களே,. இந்த வாரம் எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிலும் வெற்றியும் சந்தோஷத்தையும் தரும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்.

குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்வது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. குழந்தகளிடம் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.  புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். கேட்ட இடத்தில் இருந்து வங்கிக் கடன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் பங்குதாரர்கள் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள்  ஆவணங்களில் கையெழுத்திடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒருமுறைக்கு இருமுறை படித்து பார்க்கவும்.

பெண்களுக்கு எடுத்த காரியங்கள் சில தடைகளுக்கு பின்பே நடந்து முடியும். ஆடை, ஆபரணங்கள் போன்றவற்றை வாங்க நாட்டம் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு தொடர்ந்து வெற்றிகள் உண்டாகும். போராடி பெற வேண்டிய விசயங்களை தன்னிறைவாக பெறுவீர்கள்.

பரிகாரம்: சிவன் கோயிலுக்கு சென்று சிவனையும் நவகிரகத்தில் சூரியனையும் தீபம் ஏற்றி வழி படுவது எல்லா நன்மைகளையும் உண்டாக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

 

**********************************************

துலாம்:

கால புருஷ தத்துவத்தில் நான்காவது ராசியாக விளங்கும் கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது.

குடும்பத்தில் கணவன்-மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டு பேசி அதன் பிறகு செய்வது நன்மை தரும். குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தை குறைப்பது நல்லது.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளி போடுவது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சனை வராமல் தடுக்கும்.

பெண்களுக்கு விட்டுக் கொடுப்பதன் மூலம் சில காரியங்களை சாதித்துக் கொள்ள இயலும். நேரத்திற்கு உணவருந்த முடியாமல் போகலாம்.

மாணவர்களுக்கு  புதுத் தெம்பு ஏற்படும். கல்வியில் ஏற்பட்ட தடைகளை தாண்டி ஏற்றத்துடன் செயல்படுவீர்கள்.  முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரம்: நவகிரகத்தில் செவ்வாய்க்கு தீபம் ஏற்றி வணங்க எல்லா காரியங்களும் வெற்றி பெறும். மனத் துணிவு உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

 

**********************************************

விருச்சிகம்:

கால புருஷ தத்துவத்தில் பதினொன்றாவது ராசியாக விளங்கும் கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம்  வேகத்தை விட்டு விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும். பணவரத்து எதிர்பார்த்ததை போல இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். அதே வேளையில் மற்றவர்களிடம் உங்கள் கருத்துக்களை கூறும்போது அவர்கள் தவறாக அதை புரிந்து கொள்ளலாம்.

குடும்பத்தில் அனைத்து விசயங்களும்   சுமூகமாக நடைபெறும். இல்லத்தில்  இனிப்பான விசயங்கள் நல்லபடியாக நடந்தேறும். உடன் பிறந்தோர்கள் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்துவார்கள். சொத்து விவகாரங்களில் இருந்த சுணக்கங்கள் மாறும். கவலையின்றி இருக்க விநாயகப் பெருமானை வழிபடுங்கள்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட குறைவான லாபம் தரும். ஆனால் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாக காணப்படுவார்கள். செலவுகள் கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்லும்போதும் வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும்.

பெண்களுக்கு எந்தக் காரியம் செய்வதிலும் துணிச்சல் உண்டாகும். பெரியோர்களுக்கு உதவி புரிவதற்கு மனம் ஏங்கும். அதற்கான சூழ்நிலை வாய்க்காது.

மாணவர்களுக்கு  போட்டி பந்தயங்களில் ஈடுபட்டு பரிசுப் பொருட்களை வாங்க ஆர்வம் அதிகரிக்கும். நினைத்ததும் நடக்கும்.

பரிகாரம்: நவக்கிரக குருவை வணங்கி வர வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மன அமைதி ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

 

**********************************************

தனுசு:

கால புருஷ தத்துவத்தில் பத்தாவது ராசியாக விளங்கும் மகர ராசி அன்பர்களே, இந்த வாரம்  பொருள் சேர்க்கை உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம் கவனம் தேவை.

குடும்பத்தில் நடைபெற வேண்டிய அனைத்து நல்ல விசயங்களும் நடைபெறும். சிலருக்கு உறவினர்களால் விரும்பத்தகாத விசயங்கள் நடைபெறுவதால் மனதில் கவலை தோன்றலாம். பண விசயத்தில் திட்டமிட்டுச் செயல்களை முழுத்திறமையுடன் செய்தால் லாபம் உண்டாகும். மற்றபடி பொருளாதாரத்தில் எந்தக் குறையும் இருக்காது.

தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உங்களது செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி விடுவார்கள். பணவரத்து கூடும். தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. மேலிடத்துடன் கனிவை அணுசரிப்பது நல்லது. உறவினர்கள் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்

பெண்களுக்கு பொருளாதார சிக்கல்கள் தீரும். தேவையான உதவிகள் நண்பர்கள் மூலமாக கிடைக்கப் பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு எந்த கவனக்குறைவும் ஏற்படாது, உற்சாகத்துடன் செயல்பட்டு வீட்டிலும், பள்ளியிலும் நற்பெயர் வாங்க முடியும்.

பரிகாரம்: ஸ்ரீ மகாலஷ்மியை பூஜித்து தாமரை மலர் கொண்டு அர்சித்து வாருங்கள்.  நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

 

**********************************************

மகரம்:

கால புருஷ தத்துவத்தில் பன்னிரெண்டாவது ராசியாக விளங்கும் மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எதையும் செய்வது நல்லது. எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிக முயற்சி செய்ய வேண்டி இருக்கும். பயணங்கள் ஏற்படலாம்

குடும்பத்தில் மன நிறைவு ஏற்படும் வகையில் எல்லாம் நடக்கும். வாழ்க்கை துணையால் நன்மை உண்டாகும். குழந்தைகளுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். உறவினர், நண்பர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். நிதானம் தேவை. குழந்தைகளை வெளிநாடு சென்று படிக்க வைக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தை விரிவு படுத்து வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.  மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். ஏற்படும்.

பெண்களுக்கு  தூர தேசத்திலிருந்து வரும் செய்திகள் நன்மையைத் தரலாம். பிள்ளைகளுடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் டென்ஷன் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பரிகாரம்: மாரியம்மனை  தீபம் ஏற்றி வழிபட சகல நன்மைகளும் உண்டாகும். தடை தாமதம் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

 

**********************************************

கும்பம்:

கால புருஷ தத்துவத்தில் முதல் ராசியாக விளங்கும், மேஷ ராசி அன்பர்களே இந்த வாரம் நீங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மதிப்பளிப்பவராக இருப்பீர்கள் வீண் செலவுகள் குறையும் எந்த ஒரு வேலையை செய்து முடிப்பதிலும் இருந்த தடை தாமதம் நீங்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக வாதாடுவதையும் தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தினர்கள் முன்னிலையில் எதைப் பேசுவதாக இருந்தாலும் பேச்சில் நிதானம் தேவை. வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது.

தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். பணியாளர்கள் செயல்கள் உங்களுக்கு கோபத்தை தூண்டும்படியாக இருக்கலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரும். மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு பேச்சு திறன் அதிகரிக்கும். ஒயாது உழைத்தால் மட்டுமே பாராட்டைப் பெற முடியும். அனைவரையும் கவரும் படி பேச்சு வார்த்தை நடக்கும்.

மாணவர்களுக்கு போட்டிகள் குறையும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

பரிகாரம்:  சுப்பிரமணியருக்கு அரளி மாலை சாற்றி வணங்கி வாருங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

 

**********************************************

மீனம்:

கால புருஷ தத்துவத்தில் மூன்றாவது ராசியாக விளங்கும் மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம் நீங்கள் விவேகத்துடன் முடிவெடுப்பதில் சிறந்தவர் குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.  நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

சிலருக்கு குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும்.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து எதிர்பார்த்ததை விட குறையக் கூடும். கடன் விஷயங்களை தள்ளிபோடுவது நல்லது. புதிய நபர்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும்போது கவனம்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது

பெண்களுக்கு உண்டான பிரச்சினைகளை  களைய யாராவது ஒருவர் உதவி புரிவார்கள். பொருளாதார பிரச்சினைகள் உண்டாகக் கூடும்.

மாணவர்களுக்கு எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும். கல்வியில் இருந்த சுணக்கங்கள் வெற்றிகளாக மாறுவதைக் காண்பீர்கள்.

பரிகாரம்:  விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் விளக்கேற்றி வழிபடுங்கள். சிதறு தேங்காய் உடையுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

 

**********************************************

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா21 மணி நேரங்கள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்22 மணி நேரங்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்23 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்23 மணி நேரங்கள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்23 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா24 மணி நேரங்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா24 மணி நேரங்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

சினிமா7 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

பப்பாளி விதைகளின் அதிசய நன்மைகள்: செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை! எப்படி பயன்படுத்துவது?

ஆரோக்கியம்7 நாட்கள் ago

ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம்: கோடைக்காலத்தில் அவசியம் சுவைக்க வேண்டிய ஸ்மோக்கி ரெசிபி!

இந்தியா5 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடைகால ஆரோக்கியம்: வெயிலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? முழு வழிகாட்டி

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அட்சய திரிதியா 2026: 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும்!

வணிகம்6 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு புதிய அப்டேட் 2026: சம்பளம், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்

வணிகம்7 நாட்கள் ago

RBI புதிய விதிகள்: ஆன்லைன் மோசடிகளை தடுக்க 1 மணி நேர ‘கூலிங் பீரியட்’ – உங்கள் பணம் இப்போது பாதுகாப்பா?

Translate »
Free link building tool | automated seo backlinks | martinstools. Surowce do produkcji suplementów diety. ??.