Connect with us

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வாரபலன் (செப்டம்பர் 22 முதல் 28 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

எளிதில் கோபப்படக்கூடிய மேஷ ராசி அன்பர்களே,இந்த வாரம் எந்தப் பிரச்சனையானாலும் உடனுக்குடன் தீர்வு கண்டு முடிவெடுக்கப் பாருங்கள். அதற்காக நிதானத்தை தவற விடாதீர்கள். முடிக்கணுமேன்னு அவசரப்பட்டு, உங்க பேச்சு மாதிரியே, படபடன்னு காரியம் பண்ணினீங்கன்னா, வரக் கூடிய நன்மைகள் குறைஞ்சிடும். உங்க நடத்தை சிலருக்கு புதிராக இருக்கும். மற்றவை உங்களுக்கு வெற்றி தான்,

குடும்பத்தில் குடும்பத்தின் அருமையை உணர வேண்டிய நேரமிது. நீங்கள் உங்கள் போக்கை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். வீட்டில் நிம்மதி இருந்தால் தானே வெளி வட்டாரப் பழக்கத்திலே அமைதியுடன் நடந்து கொள்ள முடியும். ஆகையால் சிலவற்றை மனதிற்கு நிம்மதி அளிப்பதாக மாற்றிக் கொள்ளுங்கள்.

உத்தியோகஸ்தர்கள் வேலையில் நிதானத்துடன் செயல் படுங்கள். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிட்டும். சகபணியாளர்களின் அன்பிற்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமாவீர்கள். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கும், காண்டிராக்ட் மூலம் வேலையில் இருப்பவர்களுக்கும் பணி நிரந்தரம் கிடைக்கும். 

தொழிலதிபர்கள் தொழிலிடம், வியாபார தலங்களில் சுமூகமான சூழ்நிலை தெரியுது. வண்டி வாகங்களில் ஏதாவது பழுது இருந்தால் உடனே சரியாக்கிக் கொள்ளுங்கள். பெரிய இழப்பை அது தவிர்க்கும். உற்சாக மிகுதி காரணமாக வார்த்தைகளை அள்ளி விடாதீர்கள். கவனமாக பேசுங்கள்.

பெண்கள் வாயு உபாதை, நரம்பு உபாதை ஏதாவது தெரிஞ்சா உடனே மருத்துவரைப் பாருங்கள். அக்கம் பக்கத்தாரிடம் பேசும் போது கவனமாக இருங்கள். உங்கள் பேச்சை ஒன்றுக்கு இரண்டாக மாற்றி சொல்லக் கூடும். வருத்தப் பட வேண்டி வரலாம்.

மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தந்தை தாயை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உடன் பிறந்தோர் உற்றத் துணையாக இருப்பார்கள். 

பரிகாரம்: தினமும் விநாயகரை வலம் வந்து காரிய சித்தி மாலை படியுங்கள். காகத்திற்கு அன்னம் வையுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ரிஷபம்:

(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

தொய்வில்லாமல் உழைக்ககூடிய ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் புதிய முயற்சிகளைக் கொஞ்ச நாளைக்கு ஒத்திப் போடுங்கள். முடியாமல் நிற்கும் பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வர மூன்றாவது நபர் அல்லது நடுவர் யாரையும் நாடாதீர்கள். நீங்களாகவே, முயற்சித்தீர்களேயானால், எந்தப் பிரச்சனையும் எளிதில் முடியும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனமாக இருங்கள். 

குடும்பத்தில் வீட்டில் பெரியவர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். சுடு சொல்லால் யாரையும் நோகடிக்க வேண்டாம். நிதானம் தேவை. பெரியவர்கள் எதையும் நம் நன்மைக்காகத் தான் சொல்வார்கள் என்பதை நம்புங்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகம் வெளியிடத்தில் நிதானமாக நடந்து கொள்வது அவசியமாகிறது. வெளி வட்டாரத்தில் வருகின்ற செய்திகள் மனதிற்கு நிம்மதி அளிக்கும். வெளிநாடு செல்ல விரும்புவோர் எண்ணம் நிறைவேறும்.

தொழிலதிபர்கள் தொழில் செய்வோர் புது முதலீடு செய்ய ஆதங்கப் படுவீர்கள். வீடு, வாகனம் போன்ற பத்திரங்களை கவனமாக வையுங்கள். இடம் மாறி வைத்து தேட வேண்டி வரலாம். புதிய தொழில் ஆரம்பிக்க இது உகந்த நேரம் அல்ல.

பெண்கள் தலை சுற்றல், அல்லது வேறு ஏதேனும் தலை சம்மந்தப்பட்ட வியாதிகள் தொல்லைகள் வரலாம். உடனுக்குடன் கவனியுங்கள். உறவினர்கள் மத்தியில் நல்மதிப்பு உண்டாகும். அலுவலகத்துக்கு செல்லும் பெண்களுக்கு ஓய்வில்லாமல் உழைக்க வேண்டி வரலாம்.

மாணவர்கள் மாணவமணிகள் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பிப்பார்கள். ஆசிரியர்களின் பாராட்டு கிடைக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்கள் வட்டாரத்தில் பழகும் போது எச்சரிக்கை தேவை.

பரிகாரம்: ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள். பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து குளித்து விளக்கேற்றுங்கள். உடல் ஊனமுற்றோருக்கு உதவுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

வாழ்வில் உறுதியுடன் முன்னேறத்துடிக்கும் மிதுன ராசி அன்பர்களே இந்த வாரம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளைத் தள்ளிப்போடுவது உத்தமம். சின்னச் சின்ன பிரச்சனைகள் கூட மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். இந்தப் பிரச்சனைகள் எல்லாமே கிரக மாற்றங்களினால் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் வேலையை திறம்படச் செய்ய மன வலிமை கூடும். காது – மூக்கு – தொண்டை பிரச்சனை வரலாம்.

குடும்பத்தில் சந்தோஷ சூழ்நிலை தெரிகிறது.  உங்கள் வேலையை கவனம் சிதறாமல் செய்யுங்கள். புதிய வாகனம் வாங்குவது, விற்பது எல்லாவற்றையும் ஒத்திப் போடுங்கள். வீட்டில் ஏற்படும் செலவெல்லாம் சந்தோஷச் செலவுகளே. அதனால் கவலையில்லாமல் செய்யுங்கள்.  

உத்தியோகஸ்தர்கள் வருவாய்க் கேற்ற செலவைத் திட்டமிடுவீர்கள். எதிர் காலத்திற்கு தேவையான சேமிப்புகளைத் துவக்குவீர்கள். உங்கள் எதிர்காலத்துக்கு பாதுகாப்பாக அமையும். மேலதிகாரிகளால் தொல்லை ஏற்படும்.

தொழிலதிபர்கள் புதிய வேலையாட்களால் தொல்லைகள் ஏற்படலாம். புதிய வங்கிக் கடன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தங்களின் கருத்துக்கு ஒத்துப் போக பங்குதாரர்கள் மறுக்கக் கூடும்.  

பெண்கள் பிரச்சனைகளிலிருந்து தள்ளியே இருங்கள். கால்களில் வலி போன்ற உபாதைகள் ஏற்பட நேரலாம். மருத்துவரிடம் உடனே ஆலோசனை பெறுங்கள். சமையலறையில் எச்சரிக்கையோட செயல்படுங்கள். 

மாணவர்கள் தங்கள் மேற்படிப்பிற்காக முயற்சி செய்தால் வெற்றி கிட்டும். மேற்படிப்பைத் தொடர்வதற்கான வங்கிக் கடன் கிடைக்கலாம்.

பரிகாரம்: துர்காஷ்டகம் படியுங்கள். தினமும் கோவிந்த நாமாவளி சொல்லுங்கள். புற்றுள்ள கோவிலுக்கு சென்று வாருங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கடக ராசி அன்பர்களே 

இந்த வாரம் உஷ்ண சம்மந்தமான நோயகளை உடனே கவனியுங்கள். சுப விசேஷங்கள் அடுத்தடுத்து வரும். நன்மைகள் தேடி வரும் போது அதனை உதறித் தள்ளாதீர்கள். எந்த அளவுக்கு அது உதவியாக இருக்கும் என்பதை யோசித்து முடிவெடுங்கள். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் மிக அவசியம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

குடும்பத்தில் உறவினர்கள் வழியில் இருந்த மனக்கசப்பு அகலும். அவர்கள் வீட்டில் நடைபெறும் விசயங்களுக்கு உங்களை முன் நிறுத்துவார்கள். அவர்கள் ஆலோசனையை காதில் வாங்கிக் கொள்ளுங்கள். நன்மை நடைபெறும். பிள்ளைகளின் முன்னேற்றம் வியக்கத் தக்க வகையில் அமையும். உங்கள் பேச்சைக் கேட்க சிலர் விரும்புவார்கள். 

உத்தியோகஸ்தர்கள் உங்க உழைப்புக்கு ஏற்ற அளவிலே நன்மைகள் கிடைக்கும். ஏதேனும் பயணங்கள் வெளிநாடுகளிலிருந்து வருமேயானால் ஏற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு லாபத்தையே தரும்.

தொழிலதிபர்கள் தொழிலில் நடக்கும் இடத்தில் கண்ணையும், காதையும் தீட்டிகிட்டு, தகவல்களைச் சேகரியுங்கள். புதிய தொழில் வைப்புநிதி எதிர்காலத்தில் நிரந்தர தொழில் உதவிக்கு உறுதுணையாக அமையும். 

பெண்கள் உங்கள் மனதுக்கு ஏற்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உங்களுக்கு பொறுமை மிக அவசியமாகிறது. கணவன், மனைவியரிடையே அன்பு பெருக்கடுக்கும்.

மாணவர்கள் உயர்கல்வி விஷயத்தில் ஒன்றுக்கு பலமுறை யோசித்து முடிவெடுங்கள். ஏனெனில் குழப்பம் உங்கள் கண்ணை மறைக்கலாம். பெரியோர் பேச்சைக் கேட்டால் நன்மைகள் நடக்கும்.

பரிகாரம்: அம்மன் கோவிலுக்குச் சென்று மஞ்சள் நீர் அபிஷேகம் செய்யுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்)

சினத்தில் வார்த்தைகளை விட்டு விடும் சிம்ம ராசி அன்பர்களே,

இந்த வாரம் சில முன்னேற்றமான அறிகுறிகள் தென்படும். அப்படி அறிகுறிகளைக் கண்டுணர்ந்து உங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு நற் பலன்களை அள்ளித் தரும். தேவையான இடத்திலிருந்து நற் செய்திகள் வந்து குவியும். சிலர் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். 

குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதாக தெரிகிறது. ரத்த சம்மந்தமான உறவுகளிடம் பிரச்சனை தோன்றி மறையும். பேசும் போது நிதானமாகவும், இதமாகவும் பேசினால் பிரச்சனைகள் எதுவும் வராது. 

உத்தியோகஸ்தர்கள் எதிரிகள் புதிதாக முளைப்பார்கள். யாரிடமும் உங்களுடைய பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். நீங்களே உங்கள் வேலையை திட்டமிட்டு முடிவுகளை எடுக்க நன்மைகள் எளிதாக கிடைக்கும்.

தொழிலதிபர்கள் தொழிலில் முன்னேற்றம் உண்டு. மேல்நாட்டு வாணிகம் செய்வோர் தக்க பலனை அடையலாம். முயற்சி திருவினையாக்கும் என்பதற்கேற்ப முயற்சித்தால் உங்களுக்கு வெற்றி உறுதி.

பெண்கள் குடும்பத்தில் ஓய்வில்லாமல் உழைக்க நேரலாம். நேரத்திற்கு உணவருந்த முடியாமல் வயிற்று உபாதைகள் வரலாம். ஆதலால் தக்க நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். பிரச்சனைகள் வராது.

மாணவர்கள் படிப்பு உற்சாகம் தரும் வகையில் அமையும். விளையாடும் போது கவனமாக இருங்கள். வகுப்பறையில் ஆசிரியருக்கு மதிப்பு, மரியாதை விஷயங்களில் கவனம் தேவை.

பரிகாரம்: கோளறு பதிகம் படியுங்கள். இஷ்டப்பட்ட பெண் தெய்வத்துக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்யுங்கள். நல்லதே நடக்கும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

படபடப்பு இருந்தாலும் கனிவுடன் பேசும் கன்னி ராசி அன்பர்களே

இந்த வாரம் நன்மைகள் அதிகமாக நடக்கும் காலகட்டம். வெளி வட்டார பழக்க வழக்கங்கள் புதிய நட்புகள் தானாக அமையும். இந்தப் புதிய நட்பில் எச்சரிக்கையாக இருங்கள். சந்தர்ப்பங்கள் தானாக தேடி வராது. நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். எல்லா விஷயங்களிலேயும் அறிவுரை சொல்றதை நிறுத்திக் கொள்ளுங்கள். 

குடும்பத்தில் உங்கக் குடும்பத்து பிரச்சனையை முதலில் கவனியுங்க. அப்புறம் மற்றவர்களைப் பற்றி கவலைப் படலாம். யாருக்கும் ஜாமீன் கொடுக்காதீர்கள். உழைக்கிறது முழுமையாக இருக்க வேண்டும். சோம்பல் இருக்கக் கூடாது. எந்த ஒரு முயற்சியிலும் நன்மையே நடக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் இடமாற்றம் தக்க நல்ல பலனைத் தரும். எந்த இடத்திலிருந்து வரும் செய்தியும் காதிற்கு இனிமையைத் தரும். உங்கள் மேலதிகாரிகள் உங்கள் திறமையை புகழ்வார்கள். சக ஊழியர்களிடம் மதிப்பு உயரும். சம்பள உயர்வு, பதவி உயர்வு உங்களுக்கு மன நிம்மதியை அளிக்கும்.  

தொழிலதிபர்கள் தொழிலில் புது முயற்சிகளில் இறங்கலாம். கிடைத்த வாய்ப்பினை தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தொழிலாளர்கள் பிரச்சனை வரலாம். எதிலும் மாட்டிக் கொள்ளாமல் சாமர்த்தியமாக தப்பித்து விடுவீர்கள். வருங்காலத்திற்கு தேவையான வைப்புநிதி சம்மந்தமாக சேமிப்பு வைப்பீர்கள்.

  
பெண்கள் மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடாதீர்கள். அவமானப் பட நேரலாம். ஒரு இடமாக மறத்துப் போதல், தீடீர் வலி போன்ற பிரச்சனைகள் இருந்தால் உடனே மருத்துவரிடம் அனுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகள் விசயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். அவர்களை மிரட்டி பணிய வைக்காமல் அன்பாய் அரவணையுங்கள். 

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். கணிதம், பொருளாதாரம் சம்மந்தமான படிப்புகளில் உள்ளவர்கள் மேற்படிப்பில் சுலபமாக சேருவதற்கு வாய்ப்பு கிடைக்கும். உடலில் சிறிய தொற்றுகள் வரலாம். கவனமாக இருக்கவும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். பெருமாள் கோவிலுக்கு நெய் தீபமேற்றுங்கள். 

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள்,வெள்ளி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

 தத்துவத்துடன் பேசி மனதை மயக்கும் துலாம் ராசி அன்பர்களே,

இந்த வாரம் மனதில் அவ்வப்போது சஞ்சலம் தெரியும். உங்களோட தனிப்பட்ட விஷயங்களை யார்கிட்டேயும் பகிர வேண்டாம். ஆறுதல் என்று நீங்கள் நினைத்து கூறுவதை அவர்கள் தனக்கு சாதகமாம மாற்றிக் கொள்ள இயலும். தொலைதூரப் பயணங்களில் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகிறது. எதிரிகளை கட்டுக்குள் வைப்பதற்குள் பாடாய்ப்படுவீர்கள்.

குடும்பத்தில் எந்த விசயத்தையும் அனைவருக்கும் தெரியும் படி செய்யுங்கள். எதிலும் ஒளிவு, மறைவு வேண்டாம். குடும்பப் பெரியவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். அவர்கள் அறிவுரை உங்களுக்கு நல்வழியையே காட்டும். பிள்ளைகள் பாசமாக இருப்பார்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தாலும், உடன் பணிபுரிபவரால் சில சிக்கல்கள் வரலாம். தக்க சமயத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வெளி நாட்டு வாய்ப்புகள் வந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு இலாபமாகத் தான் இருக்கும். 

தொழிலதிபர்கள் இப்போதைய சூழ்நிலையில் ஏற்றமும், இறக்கமும் இருக்கத்தான் செய்யும். சில விஷயங்களை அலட்சியப் படுத்தாமல் கவனமாக இருப்பது நன்மை அளிக்கும். வண்டி, வாகனங்கள் சிறப்பாக அமையும்.

பெண்கள் அக்கம் பக்கத்தாரின் ஆதரவு கிடைக்கும். உல்லாசமாக சுற்றுலா சென்று வருவீர்கள். கணவன், மனைவியரிடையே ஒற்றுமை பலப்படும். நீங்கள் செய்யும் அனைத்து விசயங்களுக்கும் பாராட்டு கிடைக்கும். அனைவரின் ஒற்றுமைக்கு பாடுபடுவீர்கள்.

மாணவர்கள் ஏதோ படிக்கிறோம் என்று  மனதை வெறுமை படுத்திக் கொள்ள வேண்டாம். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை எப்போதும் வேண்டும். ஆசிரியர்களை மதித்து நடங்கள்.

பரிகாரம்: மகான்கள் கோவிலுக்குச் சென்று வாருங்கள். ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று வாருங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் விருச்சிக ராசி அன்பர்களே 

இந்த வாரம் நன்மைகள் நடைபெற்றே தீரும். புதிய வண்டி, வாகனங்கள் வாங்க கூடும். பெரும்பாலானோர் விருப்பத்துடன் உங்களைக் காண விரும்புவர். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். ஒருகடனை அடைக்க இன்னொரு கடன் வாங்காமல் பாருங்கள். எந்தப் பிரச்சனையும் மூன்றாம் மனிதர் தலையீடு இல்லாமல்  நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். 

குடும்பத்தில் உங்களுடைய அமைதி தான் மிகச் சிறந்த சந்தோஷம். தெய்வ அருள் உங்களுக்கு எப்போதுமே உண்டு. உங்க வளர்ச்சியை அந்த அருள் பார்த்துக் கொள்ளும். நரம்பு சம்மந்தமான உபாதைகள் வரலாம். கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்துக் கொள்ளுங்கள். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்கள் உங்க வாக்கு சாதுர்யம் உங்கள் அலுவலகத்தில் அனைவராலும் பேசப்படும். மேலதிகாரிகள் பாராட்டைப் பெறுவீர்கள். வெளிநாட்டு தொடர்புடையவர்கள் அங்கேயே செலவீனங்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு வாக்கு கொடுக்கவும். வருங்காலத்திற்கு தேவையானவற்றை திட்டமிடுவீர்கள். 

தொழிலதிபர்கள் வெளி வட்டாரத்திலிருந்து வரும் செய்திகள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். சில தடைகள் இருந்த தொழில்கள் அபிவிருத்தியாவதை நீங்கள் பார்ப்பீர்கள். மனதிலிருந்த குழப்பங்கள், மனக்கிலேசம் சரியாகும் வாய்ப்பு உள்ளது.

பெண்கள் குழந்தைகள் விசேஷங்களில் பங்கேற்பீர்கள். நீங்கள் அவர்களின் தேவையறிந்து பரிசுகளை வழங்குவீர்கள். அத்தியாவசிய தேவைகளுக்கு பஞ்சம் இருக்காது. ஆடம்பர தேவைகளை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாதீர்கள்.

மாணவர்கள் ஆர்வத்துடன் படித்து ஆச்சரியமடையச் செய்வீர்கள். ஆசிரியர் உங்களை உதாரணமாக மற்றவர்களுக்கு காட்டுவார். தந்தை, தாய் ஆதரவு உண்டு. 

பரிகாரம்: விநாயகரை வழிபட்டு அனைத்து காரியங்களையும் வெற்றிகரமாக செய்யலாம். விநாயகர் அகவல் தினமும் படியுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தனுசு (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)

எதிரிகளை தவிடு பொடியாக்கும் தனுசு ராசி அன்பர்களே 

இந்த வாரம் உங்களைப் பற்றி தெரிந்து கொண்ட சிலரால் உங்களுக்குத் தொந்தரவு வரலாம். அதற்காகத்தான் காத்திருந்தார்கள் என்பது உங்களுக்கு தெரிய வரும் போது மனதில் வெறுப்பு உண்டாகும். நிறைய விசயங்களில் புதுமையை எதிர்பார்ப்பீர்கள். நீங்களும் பொறுமையாக இருந்து தொந்தரவுகளை ஆராய்ந்தால் பாதிப்பு வலுக்காமல் இருக்கும்.

குடும்பத்தில் எந்த ஒரு  விசயத்திலும் குடும்பத்தாரை தவிர வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அது உங்களுக்கு தீமையாகத் தான் போய் முடியும். எந்தக் காரியத்தில் இறங்கினாலும் அதன் நன்மை, தீவிரமாக ஆராய்ந்து அப்புறமாக முடிவு செய்யுங்கள் கண் உபாதை ஏதேனும் இருப்பின் உடனே சரி செய்யுங்கள். சாதாரணமாக விட வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் வேலைப்பளு அதிக அளவில் இருக்கும். மற்றவர்களோடு ஒப்பிடும் போது உங்களால் தாங்கிக் கொள்ளத்தான் முடியாது. மனதை கட்டுக்குள் வையுங்கள். கவலை வேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும்.

தொழிலதிபர்கள் எதிலும் கையெழுத்திடும் போது ஒரு தடவைக்கு பலமுறை யோசித்து செய்யுங்கள். மற்றவர்களுக்கு யோசனை கூறுவதற்கு முன் அவர்கள் அதற்கு தகுதியானவர்களா என்பதை உணருங்கள். கமிஷன் வியாபாரங்கள், சிறு வியாபாரிகள் லாபம் அடைவர்.

பெண்கள் கணவன், மனைவியரிடையே சிற்சில சலசலப்புகள் வரலாம். பிள்ளைகளை அடுத்த வீட்டு குழந்தைகளோட ஒப்பிடாதீங்க. ஏனெனில் குழந்தைகள் மனதில் பிரச்சினைகள் தோன்ற வாய்ப்பிருக்கிறது. கவனமுடம் இருக்கவும்.

மாணவர்கள் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். உஷ்ண சம்மந்தமான பிரச்சினைகள் வரலாம். இரவு நேரங்களில் கண் விழித்து படிக்க நேரிடும்.

பரிகாரம்: சிவனுக்கு அபிஷேகத்துக்கு பச்சரிசி மாவு, கரும்புச்சாறு அல்லது நாட்டுச் சர்க்கரை கொடுங்கள். 

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம்,  திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

தோழமையை அதிகம் விரும்பும் மகர ராசி அன்பர்களே 

இந்த வாரம் வெளி உலகத்தினர் பாராட்டும் வழியில் உங்கள் போக்கு காணப்படும். உடல் நிலை சீராக இருக்க தக்க சமயத்தில் உணவு எடுத்துக் கொள்வது அவசியமாகிறது. அதிக கோபம் வரும் வகையில் சிலர் நடந்து கொள்வர். 

குடும்பத்தில் உங்களுடைய பாசத்தை குடும்பத்தினரும், தோழமையை நண்பர்களும் நன்கு உணரும் காலகட்டம் இது. பெரியவர்கள் ஆசி உங்களுக்கு எப்பவுமே உண்டு. அவர்கள் மனம் நோகாதபடி அவர் சொல்படி நடந்து கொள்வது மிகவும் அவசியம். 

உத்தியோகஸ்தர்கள் பணிபுரியும் இடத்தில் இருக்கும் பெண்களிடம் கவனமாக இருப்பது அவசியம். அவர்கள் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பாவீர்கள். உத்யோகத்தில் காட்டும் பொறுப்பை வீட்டிலும் அவ்வப்போது காட்டுங்கள்.

தொழிலதிபர்கள் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள்.  

பெண்கள் பொறுமையை கடைப்பிடியுங்கள். நல்லதே நடக்கும். உங்கள் வாயால் யாரையும் எதுவும் இப்போதைக்கு சொல்லாதீர்கள்.

மாணவர்கள் முக்கியமான பாடங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். மனதை தெளிவாக  வைத்திருக்க தியானம், யோகா செய்யுங்கள். 

பரிகாரம்: லலிதா சகஸ்ர நாம பாராயணம் செய்யுங்கள். அருகிலிருக்கும் கோவிலில் பெருமாளுக்கு வஸ்திரம் சாற்றுங்கள். துளசி மாலை சாற்றுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

நயமான வார்த்தைகள் பேசும் கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவம் சார்ந்த செலவுகள் நேரலாம். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். 

குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். 

உத்தியோகஸ்தர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேல் அதிகாரிகளிடமும் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும்.

தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. வாடிக்கையாளர்கள் மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். 

பெண்கள் வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.

கலைத்துறையினருக்கு பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். சக கலைஞ்சர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். கலைப் பொருட்கள் விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். 

அரசியல் துறையினருக்கு தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம். புதிய உக்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். 

மாணவர்களுக்கு உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்:  கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி லட்சுமியை வழிபட கடன் பிரச்சனை தீரும். செல்வநிலை உயரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

சுய கட்டுப்பாட்டுடன் இருக்கும் மீன ராசியினரே, இந்த வாரம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். உழைப்பு வீணாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். 

குடும்பத்தில் இருந்த பிரச்சனை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து திருப்தியடைவீர்கள். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆர்டர்கள் கைக்கு வந்து சேரும். 

உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். 

பெண்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம்.

கலைத்துறையினருக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.

அரசியல் துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மீக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தொழில் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். 

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிபெற தடைகளை தாண்டி படிக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனைபடி செயல்படுவது நல்லது.

பரிகாரம்: பெருமாளை பூஜித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா13 மணி நேரங்கள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்14 மணி நேரங்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா14 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்15 மணி நேரங்கள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்15 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா16 மணி நேரங்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா16 மணி நேரங்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா7 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

சினிமா7 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

பப்பாளி விதைகளின் அதிசய நன்மைகள்: செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை! எப்படி பயன்படுத்துவது?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

ஆரோக்கியம்7 நாட்கள் ago

ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம்: கோடைக்காலத்தில் அவசியம் சுவைக்க வேண்டிய ஸ்மோக்கி ரெசிபி!

இந்தியா5 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடைகால ஆரோக்கியம்: வெயிலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? முழு வழிகாட்டி

வணிகம்6 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அட்சய திரிதியா 2026: 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும்!

Translate »
Making digital tools accessible for everyone. produkcja suplementów diety (2026) : koszty, wymogi i proces cdmo [kompendium]. ??.