Connect with us

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (அக்டோபர் 13 முதல் 19 வரை )

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம்:

தளபதி ராசி என்று கருதப்படும் மேஷ ராசி அன்பர்களே,இந்த வாரம், பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும்.

சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.
கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத் தில் இருப்பவர்களுடன் நிதானமாக பேசுவது குடும்ப அமைதியை தரும்.

நண்பர்கள், உறவினர்கள் விலகி செல் வது போல் இருக்கும். விட்டு பிடிப்பது நல்லது. குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம்.

பெண்களுக்கு அடுத்தவர்கள் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். எனவே நிதானமாக செயல் படுவது நன்மையை தரும். எந்த பிரச்சனை யையும் சமாளிக்கும் திறமை கூடும்.

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதும், பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்வதும் வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள் பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்

*****************************************

ரிஷபம்:

பெண் மந்திரி ராசி என்று கருதப்படும் ரிஷப ராசி அன்பர்களே,இந்த வாரம் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும்.

குடும்ப விஷயங்களில் ஆர்வம் காண் பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளை கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். ஆனால் வேலை செய்பவர் களிடம் கோபப்படாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவது நன்மையை தரும்
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது.

பெண்களுக்கு எண்ணிய காரியம் கை கூடும். வீண் அலைச்சல் குறையும் சிக்கலான பிரச்சனைகளில் நல்ல முடிவு கிடைக்கும்

மாணவர்களுக்கு எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

பரிகாரம்: அருகில் இருக்கும் காவல்தெய்வத்தை வணங்க மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

*****************************************

மிதுனம்:

நல்லவர், கெட்டவர் என்று பாராமல் எல்லோரிடமும் நாசூக்காக நடந்து கொண்டு அவர்களை நன்கு பயன்படுத்தி காரிய வெற்றி பெறும் திறமையுள்ள மிதுன ராசியினரே நீங்கள் விவேகத்துடன் முடிவெடுப்பதில் சிறந்தவர். இந்த வாரம் குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.

குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன், மனைவிக்கி டையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளை களிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான முடிவே உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள். வர்த்தக திறமை அதிகரிக் கும். பணவரத்தும் திருப்திகரமாக இருக் கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மாற்று கருத்துக் களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும்.

மாணவர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து செய்வது நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

பரிகாரம்: அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்குச் சென்று அபிஷேகம் செய்து வணங்க எல்லா தொல்லைகளும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் நன்றாக நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

*****************************************

கடகம்:

மஹாராணி ராசி என்று கருதப்படும் கடக ராசி அன்பர்களே,நீங்கள் குடும்பத்தினரை நேசிப்பவர்கள். இந்த வாரம் நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன்மனைவிக்கி டையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். குழந்தைகள் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அதிக உழைப்பின் மூலம் லாபம் கிடைக்க பெறுவார்கள். பொருளா தாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எண்ணப்படி எல்லாம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உங்களது செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி விடுவார்கள். பணவரத்து கூடும். தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

பெண்களுக்கு எதிர்ப்புகள் நீங்கும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி குறையும். எதையும் அவசரப் படாமல் நிதானமாக செய்வது நல்லது.

பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

*****************************************

சிம்மம்:

மஹாராஜ ராசி என்று கருதப்படும் சிம்ம ராசி அன்பர்களே, நீங்கள் எதிர்ப்பவர்களை தக்க சமயத்தில் வெற்றி கொள்வீர்கள். இந்த வாரம் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். ஆனாலும் வீண் கவலை ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனமும், அனுசரணையும் இருப்பது நல்லது. உறவினர், நண்பர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பதை விட்டு வாடிக்கையாளர் தேவை அறிந்து செயல்படுவது முன்னேற் றத்திற்கு உதவும். பணவரத்து அதிகரிக் கும்.

உத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. தேவையான உதவிகள் அலுவலகத்தில் கிடைக்கப் பெறுவீர்கள்.

பெண்களுக்கு எதிலும் ஆக்கபூர்வமாக செய்து வெற்றி காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெற எண்ணுங்கள். அதற் கான முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்க எதிர்ப்புகள் நீங்கும். கஷ்டங்கள் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

*****************************************
கன்னி:

இளவரசி ராசி என்று கருதப்படும் கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரம் எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவ லாக இருக்கும். கணவன், மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதான மாக யோசித்து எடுப்பது நன்மை தரும். அவசரத்தை தவிர்ப்பது நல்லது. சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம்.

தொழில் வியாபாரத்தில் மந்தநிலை போக்கு காணப்பட்டாலும் தேவையான பண வரத்தும் இருக் கும். புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி இருக்கலாம். நெருப்பு, ஆயுதங்களை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

பெண்களுக்கு புதுத் தெம்புடன் காரியங்களை நடத்துவதற்கு மனதில் உற்சாகம் உண்டாகும். உறவினர்களின் வருகை திருப்தி அளிக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு ஏற்படாமல் தீவிர கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும்..

பரிகாரம்: சிவபெருமானை வணங்கி வர எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

*****************************************
துலாம்:

ஆண் மந்திரி ராசி என்று கருதப்படும் துலா ராசி அன்பர்களே,இந்த வாரம் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். விரும்பியது கிடைக்கும். அதே நேரத்தில் அதற்கான கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவு ஏற்படும்.

குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தெளிவான முடிவுகள் மூலம் நன்மை உண்டாகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து எதையும் மனம்விட்டு பேசி செய்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டு வீர்கள். குடும்ப வருமானம் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முற்படுவார்கள். அவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வாடிக் கையாளர்களின் தேவைகளை சமாளித்து விடுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்லும்போதும் வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

பெண்களுக்கு தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். எதிர்பார்ப்புகளை குறைத்து இருப்பதை வைத்து முன்னேற முயற்சிப்பது நல்லது.

பரிகாரம்: நவக்கிரஹ குருவை வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கி சுகம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

*****************************************
விருச்சிகம்:

பெண் தளபதி ராசி என்று கருதப்படும் விருச்சிக ராசி அன்பர்களே,, இந்த வாரம் எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். அதனால் நன்மையும் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

தொழில் சுமூகமாக நடைபெறும். தீராத பிரச்சனைகளைக் கூட நீங்கள் எடுக்கும் முடிவுகள் சாதகமாக்கி விடும். தொழில் விரிவாக்கத்திற்கான இடம் கையகப்படுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. சக நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதால் வேலை சுமூகமாக நடக்கும்.

பெண்களுக்கு நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் மன திருப்தியை தருவ தாக இருக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து கூடும்.
மாணவர்களுக்கு கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். தேவையான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: மஹாலக்ஷ்மியை வணங்க குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

*****************************************
தனுசு:

தேவ குருமார்கள் ராசி என்று கருதப்படும் தனுசு ராசி அன்பர்களே,நீங்கள் இறை நம்பிக்கை அதிகம் உடையவர்கள். இந்த வாரம் கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும்.

குடும்பத்தில் கணவன்மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதங்கள் உண்டாகலாம். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரிடலாம். வீண்செலவு கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும். பணவரத்து இப்போது உண்டாகும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள். அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படலாம்.

பெண்களுக்கு மனதில் தைரியம் உண்டாகும். அவசர முடிவுகளை தவிர்ப் பது நல்லது. வீண்வாக்கு வாதத்தை விட்டு நிதானமாக பேசுவது நன்மை தரும்.

மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக படித்து முடிப்பீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வணங்கி வர எல்லாப் பிரச்சினைகளும் விலகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

*****************************************
மகரம்:

சட்ட வல்லுநர் ராசி என்று கருதப்படும் மகர ராசி அன்பர்களே,இந்த வாரம் வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மன திருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.

குடும்பத்தில் குழந்தைகளால் பெருமை சேரும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்துசேரும். திருப்திகரமான லாபம் கிடைக்கும்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். கையெழுத்து போடும் பொறுப்பில் உள்ளவர்கள் கவனமாக கையாள்வது சிறந்தது.

பெண்களுக்கு வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்கள் ஆலோசனை களை ஏற்குமுன் அதுபற்றி பரிசீலிப்பது நல்லது.

மாணவர்களுக்கு: மாணவர்களுக்கு திறமையாக எதையும் செய்து பாராட்டு பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றத்திற்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

பரிகாரம்: முன்னோர்களுக்கு தீபம் ஏற்றி வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

*****************************************
கும்பம்:

உழைக்கும் வர்க்க ராசி என்று கருதப்படும் கும்ப ராசி அன்பர்களே,இந்த வாரம் உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அஷ்டமத்து சனியால் வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை.

குடும்பத்தில் சுமூகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.
தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாக செய்வார்கள். தேவையான பண உதவியும் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலை மாற்றம் உண்டாகலாம். புதிய பொறுப்புகளைச் சுமக்க வேண்டி வரலாம்.

பெண்கள் அதிகம் பேசுவதை தவிர்த்து செயலில் வேகம் காட்டுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை செய்யும் முன்பு அது பற்றி ஆலோசனை செய்வது நல்லது
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் கவனத்துடன் படிப்பீர் கள். ஆசிரியர், சக மாணவர் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும்.

பரிகாரம்: வினாயகருக்கு அருகம்புல் மாலை போட்டு வணங்க எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். மனதில் தைரியம் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

*****************************************
மீனம்:

பெண் ஆலோசகர் ராசி என்று கருதப்படும் மீன ராசி அன்பர்களே,இந்த வாரம் காரிய அனுகூலம் ஏற்படும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை.

குடும்பம் தொடர்பான கவலைகள் ஏற்படும். குடும்ப செலவை சமாளிக்க பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் ஆன்மீக எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும்.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகை முன்னேற்றங்களும் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறித்த நேரத்தில் வேலையை முடித்து பாராட்டு பெறுவீர்கள். திடீர் பயணங்கள் செய்ய வேண்டி வரலாம்.
பெண்கள் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை.

மாணவர்கள் கோபத்தை குறைத்து நிதானத்தை கடை பிடிப்பது முன்னேற் றத்திற்கு வழி வகுக்கும். பாடங்களை நன்கு படித்து பாராட்டு பெறுவீர்கள்

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்கி வர துன்பங்கள் விலகி இன்பங்கள் தேடி வரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

*****************************************

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா21 மணி நேரங்கள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்22 மணி நேரங்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்23 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்23 மணி நேரங்கள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்23 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா24 மணி நேரங்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா24 மணி நேரங்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

சினிமா7 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

பப்பாளி விதைகளின் அதிசய நன்மைகள்: செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை! எப்படி பயன்படுத்துவது?

ஆரோக்கியம்7 நாட்கள் ago

ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம்: கோடைக்காலத்தில் அவசியம் சுவைக்க வேண்டிய ஸ்மோக்கி ரெசிபி!

இந்தியா5 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடைகால ஆரோக்கியம்: வெயிலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? முழு வழிகாட்டி

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அட்சய திரிதியா 2026: 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும்!

வணிகம்6 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு புதிய அப்டேட் 2026: சம்பளம், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.04.2026

Translate »
Martin's free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide. Koszty produkcji suplementów diety, koszt, rynek, biznes. Die botanischen termine der stadt köln im mai 2026.