இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.11.2026

- டிஜிபியிடம் அறிக்கை கேட்ட தேசிய மகளிர் ஆணையம்! மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி தகவல் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு! பெண்களின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை!
- அமெரிக்கா, ஐரோப்பாவின் குடிநீர்க் கிடங்குகள் மற்றம் உணவுக் கிடங்குகள் மீது ஈரானின் பயங்கர ஏஐ சைபர் தாக்குதலில் ஈடுபட்டு முடக்கிய ஈரான் ஹேக்கர்கள்.
- வங்கக்கடலில் உருவாகிறது அக்வான் புயல்! காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தகவல்.
- மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரை 92000 ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட 600 வழக்குகள் ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
- மின்தேவையை கணிக்க தவறிய தமிழக அரசு; எல்-நினோ பாதிப்பால் கோடையில் மின்தட்டுப்பாடு அபாயம்: 5 ஆண்டுகளுக்கு 3,000 மெகாவாட் மின்சாரம் வாங்க திட்டம்
- தமிழ்நாடு ரேசன் கடைகளில் குருணையின் அளவை குறைத்து IMPROVED RICE எனப்படும் தரம் உயர்ந்த அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவு. இதுவரையில் பச்சரிசியில் 25% குருணை அனுமதிக்கப்பட்ட நிலையில் அதனை 10% ஆகவும், புழுங்கல் அரிசியில் குருணையின் அளவை 16% சதவீதத்தில் இருந்து 5% ஆகவும் குறைத்துள்ளது. புதிய நடைமுறையின் கீழ் 2027 ம் ஆண்டு பிப்ரவரி முதல் அரவை பணிகள் மேற்கொள்ள உத்தரவு.
- சிறார் குற்றவாளிகளுக்கான வயது வரம்பை 18 லிருந்து 16 ஆகக் குறைப்பது குறித்து சட்டமன்றங்கள் பரிசீலிக்க வேண்டு என கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 16 வயதிலேயே குழந்தைகள் போதிய மன முதிர்ச்சியை அடைவதாக்க் குறிப்பிட்ட நீதிமன்றம் சிறார் தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டிய நேரம் வந்தவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
- மண்டல மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று நடை திறக்கப்பட்டது.ஜனவரி 20 வரை 62 நாட்களுக்கு பூஜை நடைபெறும். டிசம்பர் 27ம் தேதி பிரதான மண்டல பூஜை நடைபெறும் நிலையில் ஜனவரி 14 ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெறும் என அறிவிப்பு.





