இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.11.2026

- தமிழ்நாடு முழுதும் நடைபாதை ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது. ஆக்கிரமிப்ப அகற்றம் நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும். தமிழ்நாடு அரசு டிசம்பர் 10க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
- ஆர்.ஏ.சி. முறையை முழுமையாக ரத்து செய்வதா அல்லது அதில் மாற்றங்களைக் கொண்டுவருவதா என்பது குறித்து ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. இதனால் பாதிப் படுக்கைக்கு முழுக் கட்டணம் செலுத்தும் நிலைக்கு முடிவு வருமா என்ற எதிர்பார்ப்பு பயணிகளிடையே எழுந்துள்ளது.
- கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ஆபாச செய்தி அனுப்பி நேரில் தொல்லை கொடுத்த தவெக MLA அருள் விக்னேஷ் மீது புகார் அளித்தும் தவெக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஒன்றிய அரசுக்கு புகார் அனுப்பி உள்ளார் கலெக்டர்.
- பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்க இருப்ப வரம்பை நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு. மொத்த வணிகர்கள் 200 டன் பருப்பு வைக்கவும் சில்லறை வணிகர்கள் தலா 5 டன் பருப்பு இருப்பு வைக்கவும் அனுமதி. சர்க்கரையை 15 நாட்களுக்கு மேல் இருப்பைத் தன்னிடம் வைத்திருக்கக்கூடாது.
- ஓய்வு பெறும் நாளில் மின்வாரிய ஊழியர்களை சஸ்பெண்டு செய்யக்கூடாது என தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் உத்தரவு. ஊழியர்கள் செய்த தவறால் ஏற்பட்ட நிதி இழப்பை மட்டும் கழித்துக் கொண்டு ஓய்வுதிய பணிக்கொடையை வழங்குமாறு ஆணை. கடுமையான குற்றச்சாட்டு ஃ கிரிமினல் முறைகேடு வழக்கு உள்ளவர்களுக்க மட்டுமே முழு பணிக்கொடை நிறுத்தி வைக்கப்படும் – தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம்.
- அமெரிக்காவில் ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்து முடக்கம்.. 13,000 விமான சேவைகள் பாதிப்பு.. 15 லட்சம் பயணிகள் தவிப்பு!
- ந்தியாவுலயே நீளமான ரயில் நிலையப் பேர் நம்ம சென்னை சென்ட்ரலுக்குத் தான் “புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்”. 2019 ஏப்ரல் 5ல இந்தப் பேர் வந்துச்சு
- கோவை பீளமேட்டில் முதுகில் மனித முகம் போன்ற வடிவத்துடன் காணப்பட்ட விசித்திரப் பூச்சி – ஆச்சரியத்தில் பொதுமக்கள்! அறிவியல் ரீதியாக Catacanthus incarnatus என்று அழைக்கப்படும் இந்தப் பூச்சி, ஆங்கிலத்தில் Man-faced Stink Bug என அறியப்படுகிறது.
- தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மோசடி.. 24 வங்கிக் கணக்குகளுக்கு பணம் மாற்றம்.. 7 பேர் கைது!





