இந்தியா
இரவுச் செய்திகள் – 10.11.2026

- டாஸ்மாக் பணியாளர்கள் ஒரே கடையில் 3 ஆண்டுகள் மட்டும் பணிபுரிய முடியும்: 3 ஆண்டுகள் முடிந்த பின்னர் வேறு கடைகளுக்கு இடம் மாற்றிட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு.
- பெரியார் அறிவுலக புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு.
- அகல் விளக்கு பதிப்பகம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை இன்றே வழக்குப் பதிவு செய்யவும், அதன் வங்கிக் கணக்கை முடக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
- புத்தக கொள்முதலில் ஈடுபட்ட அதிகாரிகளின் பட்டியல் நாளை தாக்கல் செய்ய வேண்டும்; முறைகேட்டில் ஈடுபட்டோர் தண்டிக்கப்பட்டால்தான் திருந்துவார்கள்” நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்வது தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் பல உத்தரவுகளை அரசுக்கு பிறப்பித்துள்ளனர்
- அரசாணை எண் 164 ஐ திரும்ப்ப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுதும் ஆவண எழுத்தர்கள் பத்திரப்பதிவுகளைப் புறக்கணித்து தொடர் போராட்டம். பத்திரப்பதிவு அலுவலகங்கள் வெறிச்சோடி பொதுமக்கள் பாதிக்கப்பட்ட சூழலில் அரசுக்கு நூற்றுக் கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்பு என தகவல்.
- மக்கள்தொகை கணக் கெடுப்புக்கான முதற்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தலா 800 வீடுகள் அடங்கிய 24.25 லட்சம் வீட்டுமனை தொகுப்புக்கான வரைப டம் டிஜிட்டல் முறையில் வரையறுக்கப்பட்டுள்ளது.
- காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் விவகாரத்தில், தமிழ்நாடு உள்பட யாரிடமும் அனுமதி பெற தேவை யில்லை என்று கருநாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

