ஆன்மீகம்
65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் மலைக்குச் செல்வதறகு முன் எருமேலியில் வாவர் மசூதியில் தொழுத பின்னர் அங்கேயே பேட்டை துள்ளல் என்ற நிகழ்வையும் முடித்துக் கொண்டு பின்னர் பம்பை சென்று அங்கிருந்து சரங்கொத்தி வழியாக சபரிமலை சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசிப்பார்கள்.
அவ்வாறு செல்வோருக்கு தவிர்க்க்க் கூடாத கடமையான வாவர் மசூதி சென்று வணங்குதல் என்பது இன்றியமையாதது.
இந்த வாவர் மசூதியில் வணங்கச் செல்லும் அணைத்து ஐயப்ப பக்தர்களுக்கும் விபுதி பிரசாதம் வழங்கப்படும். இது மத நல்லிணக்கத்தின் அடையாளமாக செய்யப்படுகிறது.
இந்த கடமையை கடந்த 65 ஆண்டு காலமாக செய்து சேவையாற்றி வந்த இமாம் அப்துல் கரீம் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 104.
சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கும் வாவர் பள்ளிவாசலுக்கும் இடையிலான நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழ்ந்து வந்தார்!.
அவரது மறைவுக்கு அஞசலி செலுத்தும் விதமாக மரியாதை நிமித்தமாக எருமேலியில் உள்ள அணைத்து வணிகர்களும் தங்களது கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்களை அடைத்து அவருக்கு மரியாதை செலுத்தினர்.
அன்னாரின் இறுதிச் சடங்கு நாளை முழு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது.

