Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.10.2026

Published

on

  1. தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? காவலர்கள் சீருடையில் தமிழ் புறக்கணிக்கப் பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டி திமுக கேள்வி எழுப்பியுள்ளது! காவல்துறை சீருடையில் தமிழுக்கு உரிய இடம் வழங்கப்படுகிறதா? என்ற விவாதத்தை இந்தக் கேள்வி எழுப்பியுள்ளது.
  2. எம்எல்ஏக்களின் கார் வாங்கும் விதிகளில் அதிரடி மாற்றம்! தமிழகத்தில் எம்எல்ஏக்களுக்கான கார் வாங்கும் விதிகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு! அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கான கார் வாங்கும் உச்சவரம்பு ரூ.26 லட்சமாக நிர்ணயம்!
  3. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக நாளை அனைத்துக்கட்சி கூட்டம்! திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட 13 கட்சிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
  4. வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு ‘முரசு’!  உருவாகும் புயலுக்கு ‘முரசு’ எனப் பெயரிட முடிவு! தமிழ்ப் பெயரைப் பரிந்துரைத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.
  5. பிரபல பாடகர் கிருஷ்ணராஜ் (75) உடல்நலக் குறைவால் காலமானார் பொற்காலம் படத்தில் தேவாவின் இசையில் தஞ்சாவுரு மண்ணு எடுத்து என்ற பாடலை பாடியுள்ளார்.
  6. டெல்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு! தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மீண்டும் மோசமடைந்ததால், இன்று முதல் முதற்கட்டக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன! காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பொதுமக்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.
  7. சென்னையில் மழைநீர் சேகரிப்புக்கான மாதிரி கட்டடம் மற்றும் இலச்சினையை அறிமுகப்படுத்தினார் முதலமைச்சர் விஜய். மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 28 அடி உயர பிரமாண்ட திரையையும் திறந்து வைத்தார்.
  8. கர்நாடக சட்டமன்றத்தை தகர்ப்பது போல AI வீடியோ வெளியிட்ட பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஹசரத் அலி (25) கைது!! இந்த வீடியோவை உருவாக்கியதற்கான நோக்கம் என்ன? என அவரிடம் போலீசார் விசாரணை. சமூக பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இது போன்ற ஏஐ வீடியோக்கள் வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். – காவல்துறை
  9. தமிழ்நாடு முழுவதும் மாநில அரசு அலுவலகங்களில் மோடியின் பிறந்தநாளுக்கு மோடியின் போட்டோவை வைக்க ஆர.எஸ்எஸ் சங் பரிவார்களுக்கு தவெக அரசு அனுமதித்துள்ளதாக தகவல்.
  10. கணவன்-மனைவி இடையிலான மோதல் காரணமாக முதியோரின் நிம்மதி பாழாகும்போது மூத்த குடிமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மகன் அல்லது மருமகளை வீட்டை விட்டு காலி செய்ய சட்டத்தில் இடமுண்டு. சொந்த வீடு மற்றும் வருமானம் கொண்ட மருமகளுக்கு கூட்டுக் குடும்ப வீட்டில் தொடர்ந்து வாழும் முழுமையான உரிமை கிடையாது. மூத்த குடிமக்கள் தங்களது அந்திம காலத்தில் அமைதியாக வாழ்வதற்கான உரிமையே முதன்மையானது. – டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு.
  11. பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரே நாளில் 27 பதக்கங்களை வென்ற இந்திய வீர்ர்கள்.  பதக்கம் வென்ற தமிழக வீர்ர் வீராங்களைக்க தமிழ்நாடு அரசு தலா ரூ.50 லட்சம்  ஊக்கத்தொகை அறிவிப்பு.
  12. தஞ்சாவுரில் மாமன்னர் இராஜராஜசோழனின் 1041 வது சதய விழா தொடங்கியது.
  13. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோலை வடிவமைத்த உம்மிடி பங்காரு ஜீவல்லர்ஸின் உரிமையாளர் உம்மிடி எத்திராஜி(99) உடல்நலக்குறைவால் காலமானார்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா7 நாட்கள் ago

ரோல்ஸ் ராய்ஸில் 🚗 ஆட்டோ டிரைவர்களை அழைத்துச் சென்று மாஸ் காட்டிய லெஜெண்ட்!

இந்தியா6 நாட்கள் ago

தனியார் மயமாகும் மின்கணக்கீட்டுப் பணி

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 24.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.10.2026

Translate »
Business franchise magazine is a bi monthly publication that offers the latest news, expert advice, and franchise information from australia and new zealand.