இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

- சென்னையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்! தண்ணீர் தேங்கும் இடங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 250 படகுகள் தயார் நிலையில் உள்ளன! மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1.40 லட்சம் பேர் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
- மின்சார தேவையைச் சமாளிக்க அதிரடி முடிவு! வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்ய 3வது டெண்டரை வெளியிட்டது மின்சார வாரியம்! நவம்பர் முதல் மே வரை மாலை நேர மின்சாரத் தேவையைச் சமாளிக்க மாதந்தோறும் 1,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யத் திட்டம்!
- அமெரிக்கா ஈரான் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க ராணுவத் தளங்கள் ஈரானின் கடுமையான பதிலடிக்கான இலக்குகளாக மாறும் என ஈரான் எச்சரித்துள்ளது!
- இத்தாலியின் புகழ்பெற்ற பீசா சாய்ந்த கோபுரத்தின் மீது பாலஸ்தீன ஆதரவு செயற்பாட்டாளர்கள் பாலஸ்தீனக் கொடியை ஏற்றி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். காசா போர் நிறுத்தத்தை வலியுறுத்தி நடைபெற்ற இந்த திடீர் போராட்டத்தின் போது வண்ணப் புகைக் குண்டுகளும் வெடிக்கப்பட்டன.
- முந்தைய போர்களைவிடப் பேரழிவை ஏற்படுத்தும் பதிலடி தயார்! – ஈரான் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எச்சரிக்கை! ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்பு மன்றச் செயலாளர் மொஹ்சென் ரெஸாயி, புதிய தாக்குதலை எதிர்கொள்ள ஈரானின் ஆயுதப் படைகள் புதிய செயல்பாட்டுத் திட்டத்தைத் தயாரித்துள்ளதாக இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்
- டெங்கு ஆபத்து உங்கள் வீட்டிலேயே இருக்கலாம்! கவனம் தேவை. ஏடிஸ் கொசுக்கள் சிறிய அளவு தேங்கிய நீரில்கூட முட்டையிடும். வீட்டைச் சுற்றியுள்ள பூந்தொட்டிகள், தண்ணீர் பாத்திரங்கள், பாட்டில் மூடிகள் உள்ளிட்ட இடங்களில் நீர் தேங்காமல் வாரம் ஒருமுறை சுத்தம் செய்யுங்கள். இந்தக் கொசுக்கள் பெரும்பாலும் பகல் நேரத்தில் கடிக்கும் என்பதால், கொசுக்கடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
- இத்தாலி தெருக்களில் வெடித்த மக்கள் புரட்சி! “போருக்கு காசு இருக்கு… மக்களுக்கு இல்லையா?!” பற்றி எரியும் போலோக்னா, டுரின், புளோரன்ஸ்! அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து மக்கள் திணறி வரும் நிலையிலும், சொந்த நாட்டின் கல்வி, மருத்துவத்திற்கு நிதி ஒதுக்காமல், வெளிநாட்டுப் போர்களுக்கும் ஆயுதக் குவிப்புக்கும் (Military Spending & Rearmament) பல்லாயிரக்கணக்கான கோடிகளை வாரி இறைக்கும் அரசுக்கு எதிராக இத்தாலிய நகரங்களில் மக்கள் வெள்ளம் வீதிகளில் இறங்கியுள்ளது
- IDBI வங்கியை தனியாருக்கு தாரைவார்க்கும் அரசு! இந்தியாவிற்கு காத்திருக்கும் ஆபத்து!
- தமிழ்நாடு அரசு சார்பில் திருமணமாகும் இளம்பெண்களுக்கு வழங்கப்படும் “அண்ணன் சீர்“ திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதமார் எண் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு 1 சவரன் தங்கம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்படுகிறது. ஆதார் இல்லாதவர்கள் புதிய பதிவிற்கான ரசீதுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மற்ற 11 ஆவணங்களில் டீதேனும் ஒன்றினை இணைத்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- நெய்வேலி சுரங்க விரிவாக்கத்திற்கு தென்குத்து வானதிராயபுரம் கிராமங்களில் நில எடுப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவு. கிராம மக்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே அரசாணை வெளியீடு. இரண்டு கிராமங்களிலும் சேர்த்து 8.4 ஏக்கர் நிலம் எடுக்க ஆணை.
- ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என தவெக முடிவு செய்துள்ளதாக தகவல்.
- சென்னை பட்டினப்பாக்திற்கு பதில் MTC பேருந்நு பணிமனை அமைந்துள்ள பல்லவன் இல்லம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட தவெக அரசு முடிவு என தகவல். அதிகாரப்புர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு.


