இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

- சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்ட்ட வளாகம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1200 கோடி மதிப்பீட்டில் சென்னையில் உருவாக்கப்படும். – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
- நேபாளம் வெள்ளத்தில் காணாமல் போனவர்களை அடையாளம் காண தமிழ்நாடு அரசு சார்பில் DNA பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!
- ரூபாய் மதிப்பு 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு! டாலருக்கு எதிராக ரூபாய் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. செப்டம்பர் 3-ம் தேதி ₹94.30-ஆக தொடங்கியது. RBI நடவடிக்கைகள், அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு மற்றும் NRI முதலீட்டு வரவு ஆகியவை ரூபாய் மதிப்பு உயர்வுக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.
- வரும் பிப்ரவரி 2027 வரை எல் நினோ நீடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் இந்த ஆண்டு இந்தியாவில் குளிர்காலம் வெப்பமாக இருக்கலாம் என்றும் உலக வானிலை ஆய்வு மையம் கணிப்பு. 2026 இறுதியில் மழைப்பொழிவு மற்றம் வெப்பநிலை சீர்குலைவுகள் ஏற்படும் எனவும் தகவல்.
- கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இரண்டாக உடைந்தது. அந்த இயக்கத்தில் இருந்து அண்மையில் விலகிய மணீஷ் பிரம்பட் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி – ஜனநாயகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார்.!
- வளர்ந்து வரும் உலகின் முக்கிய பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான ‘பிரிக்ஸ்’ அமைப்பின் வருடாந்திர உச்சிமாநாடு நாட்டின் தலைநகரான புதுடெல்லியில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி டெல்லியில் இயங்கும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
- சோனியாவின் சுயசரிதை புத்தகம்: பெங்குயின் வெளியிட மறுத்ததை அடுத்து ‘ஹார்பர் காலின்ஸ் இந்தியா’ நிறுவனம் இந்திய வெளியீட்டு உரிமையைப் பெற்றது.!
- தமிழ்நாடு மருத்துவர்களுக்கான 151 உயர் சிறப்பு மருத்துவ இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு கொடுத்து, தமிழ்நாடு அரசு 151 இடங்களை ஒன்றிய அரசிடம் பரிகொடுத்தது. தற்போது அந்த 151 இடங்களில் காலியாக உள்ள 40 இடங்களை மட்டும் தமிழ்நாட்டிற்கே திருப்பி ஒப்படைப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.




