இந்தியா
,இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.06.2026

- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சி.மகேந்திரன் தவெகவில் இணைந்தார்.
- பட்ஜெட் கூட்டத் தொடர் 3 நாள் குறுகிய கால கூட்டம் எனபதால் கேள்வி பதில் நிகழ்ச்சி இந்த சட்டமன்றக் கூட்டத்தில் இருக்காது. – சபாநாயகர் அறிவிப்பு. எனவே அனைத்துத் துறை மானியக் கோரிக்கைகளும் விவாதமின்றியே நிறைவேறியதாகக் கருதப்படும்.
- கேரளா மேற்குவங்கம் பஞ்சாப் ராஜஸ்தான் டெல்லி பீகார் குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் யூபிஎஸ்சி தேர்வில் மெகா மோசடி. EWS ஒதுக்கீட்டை முறைகேடாக பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களில் உயர் பதிவியில் இருப்போர் வெளிநாடுகளில் வேலையில் இருப்போர் மிகப்பெரிய தொழிலதிபர்கள் செல்வந்தர்களின் பிள்ளைகள் என 108 பேர் மோசடி செய்து மத்திய அரசு பணிகளில் சேர்ந்துள்ளனர். – சிபிஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை.
- தமிழ்நாடு அரசின் உறதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 01.01.2026 பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு.
- கர்நாடகா அரசு காவிரியில் மோதாது அணை கட்டுவதற்க எதிராக இன்ற தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
- நாடு முழுதும் ஜீன் 28ம் தேதி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்க இருக்கிறது.
- சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 600 ரன்களை கடந்த முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார்.
- இந்த சாதனை இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.


















