இந்தியா
பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

தமிழ்நாட்டின் 17 வது சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நான்கு முனை போட்டியாக நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணி முடிக்கப்பட்டன. எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
திமுக கூட்டணி – 74 இடங்கள்
அதிமுக கூட்டணி – 53 இடங்கள்
தவெக அணி – 107 இடங்கள்
இந்நிலையில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படுவதால் பல்வேறு விதமான குதிரை பேரங்கள் நடைபெற்று வருகின்றன.
எது எப்படியிருந்தாலும் தவெக தலைவர் விஜய்தான் அடுத்த முதல்வர் என்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய் பனையூர் பங்களாவிலிருந்து தலைமைச் செயலகம் வந்து செல்ல ஹெலிபேட் அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
விஜய் பனையூரிலிருந்து தலைமைச் செயலகம் வரை காரில் வந்து செல்ல ஒரு மணி நேரம் ஆகும் என்பதாலும் இதனால் முதலமைச்சர் வாகனங்களுக்கு வழி ஏற்பாடு செய்யும்போது பொதுமக்களுக்கு தேவையற்ற இடைஞ்சல் ஏற்படும் என்பதாலும் அதனால் பொதுமக்களிடையே தேவையற்ற அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதாலும் பனையூரிலிருந்து தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்ல ஹெலிகாப்டர் வசதி ஏற்படுத்தி தர திட்டமிடப்பட்டு இருக்கிறதாம்.
நேப்பியர் பாலம் அருகே கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான ஹெலிபேட் ஒன்று உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயல்லிதா தேர்தல் பிரச்சாரங்களுக்கு செல்ல அந்த வெறலிபேடைப் பயன்படுத்தி இருக்கிறார். டில்லியிலிருந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மற்றும் ஜனாதிபதி போன்றோரும் அதை பயன்படுத்தி வருகின்றனர்.
அது கடலோரக் காவல்படை பயன்பாட்டிலும் கட்டுப்பாட்டிலும் உள்ளதால் தினந்தோறும் அதை பயன்படுத்த உரிய அனுமதி கிடைக்காது என்று சொல்லப்படுகிறது.
எனவே தலைமைச் செயலகத்திற்கு வெளியே உள்ள வாகன நிறுத்தத்தின் அருகே ஒரு தற்காலிக ஹெலிபெட் அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் பனையூர் பங்களாவுக்க அருகில் கிழக்கு கடற்கரையை ஒட்டிய இடத்தில் இரண்டு இடங்களில் ஹெலிபேட் அமைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
இதற்கு அரசுப்பணம் செலவிடப்படுமா அல்லது விஜய் தனது சொந்த பணத்தில் செய்து கொள்வாரா என்று தற்போது கேள்வி எழுந்துள்ளது. பிரதமர் மற்றும் ஜனாதிபதி போன்ற நாட்டின் உயரிய பதவிகளில் உள்ளவர்களே நாள்தோறும் டில்லி நகருக்குள்ளெ பல்வேறு இடங்களுக்கு சென்று வர அரசு வாகனங்களைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.
இங்கு தமிழ்நாட்டிலும் தற்போது முதல்வர் வந்து செல்ல ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அரசு வாகனங்கள் இருக்கிறது. அவை என்ன செய்யப்படும்? புதிய ஹெலிகாப்டர் வாங்க மற்றும் ஹெலிபேடுகள் அமைக்க அரசுப்பணம் செலவழிக்கப்படுமா? என்பன போன்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. இது குறித்து ஒன்றிய அரசின் அனுமதி மற்றும் நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் ஆகியவை பெறப்படுமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. எல்லா வசதிகளையும் விட்டுவிட்டு மக்கள் பணியாற்ற வரும் ஒருவர் இப்படி செய்வாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

















