வணிகம்
எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை: ஏப்ரல் 11 அதிகாலையில் சேவைகள் பாதிப்பு!
Published
7 மாதங்கள் agoon
By
Poovizhi
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான State Bank of India (எஸ்.பி.ஐ), தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் வங்கிக்கு நேரில் சென்று நேரத்தை வீணாக்காமல் இருக்க, எஸ்.பி.ஐ தனது பெரும்பாலான சேவைகளை டிஜிட்டல் வழிகளில் வழங்கி வருகிறது. குறிப்பாக, YONO SBI மற்றும் YONO Lite SBI செயலிகள் மூலம் பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல சேவைகள் எளிதாக கிடைக்கின்றன.
இந்த செயலிகளில் உள்நுழையும்போது, பாதுகாப்பு காரணங்களுக்காக OTP (ஒருமுறை கடவுச்சொல்) அவசியமாக பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக, ஏப்ரல் 11, 2026 அன்று அதிகாலை 2.30 மணி முதல் 2.50 மணி வரை OTP அடிப்படையிலான சேவைகளில் இடையூறுகள் ஏற்படக்கூடும் என எஸ்.பி.ஐ எச்சரித்துள்ளது.
இந்த குறுகிய காலத்தில், இணைய வங்கி சேவை, YONO, YONO Lite ஆகியவற்றில் இடையிடையே சேவை தடை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே, அந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் தடையற்ற சேவைகளுக்காக ATM, UPI, Secure OTP மற்றும் SBI Authenticator போன்ற மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வங்கி அறிவுறுத்தியுள்ளது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

