வணிகம்
SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு: இந்த நேரத்தில் யோனோ சேவையில் தடங்கல்!
Published
4 மாதங்கள் agoon
By
Poovizhi
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான State Bank of India (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
பல கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட எஸ்.பி.ஐ., வங்கி சேவைகளை எளிதாகப் பெறும் வகையில் தனது டிஜிட்டல் தளங்களை அதிகமாக பயன்படுத்த வலியுறுத்தி வருகிறது. அதன்படி YONO SBI மற்றும் YONO Lite SBI போன்ற செயலிகள் மூலம் பண பரிமாற்றம் உள்ளிட்ட பல சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்த செயலிகளில் உள்நுழையும்போது, பாதுகாப்பு காரணங்களுக்காக ஒருமுறை கடவுச்சொல் (OTP) பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக சில சேவைகளில் தற்காலிக தடங்கல் ஏற்படக்கூடும் என எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
எஸ்.பி.ஐ. வெளியிட்ட அறிவிப்பின்படி, 2026 ஏப்ரல் 11 ஆம் தேதி அதிகாலை 2:30 மணி முதல் 2:50 மணி வரை:
- இணைய வங்கி சேவை
- யோனோ எஸ்.பி.ஐ.
- யோனோ லைட்
போன்ற OTP அடிப்படையிலான சேவைகள் இடையிடையே செயலிழக்கலாம்.
இந்த நேரத்தில், வாடிக்கையாளர்கள் தடையற்ற சேவைகளுக்காக:
- ATM
- UPI
- Secure OTP
- SBI Authenticator
போன்ற மாற்று வசதிகளை பயன்படுத்தலாம் என்று வங்கி அறிவுறுத்தியுள்ளது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.
















