இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 06.01.2026

- 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி விட்டன. தமிழ்நாடு கேரளா புதுச்சேரி அஸ்ஸாம் மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில் ஏப்ரலில் தேர்தல். தமிழ்நாடு கேரளா புதுச்சேரியில் ஏப்ரல் 2வது வாரத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்த வாய்ப்பு. தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்பு
- இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.70 உயர்ந்து கிராம் ரூ.12830க்கும் சவரன் ரூ.102640க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.5 உயர்ந்து கிராம் ரூ.271க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.271000க்கும் விற்பனை ஆகிறது.
- திருப்பரங்குன்ற மலை உச்சியில் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றும்போது பொதுமக்களை அனுமதிக்கக் 4டாது. மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும். பொதுமக்கள் யாரும் தீப்பத்தூணில் தீபம் ஏற்ற கோணில் நிர்வாகத்துடன் செல்லக் கூடாது. மத்திய தொல்லியல் துறை அனுமதியுடன் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வெண்டும். – மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு.
- பொங்கல் பரிசுத் தொகுப்ப வழங்கும் திட்டத்தை 8ம் தேதி முதல்வர் சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
- அமெரிக்க அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறும் அமெரிக்க வாழ் வெளிநாட்டினர் பெயர்களின் 120 நாடுகள் பட்டியலில் இந்திய பெயர் இடம் பெறாதது அணைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. – அமெரிக்க அதிபர் டிரம்ப்.
- சீனாவைச் செர்ந்த வணிகர்கள் இந்தியாவில் பயணம் செய்வதற்கான இ-பி-4 என்ற இ-பிசினஸ் விசா இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 45 முதல் 50 நாட்களுக்குள் வழங்கப்படும் இதைக்கொண்டு 6 மாதங்கள் வரை இந்தியாவில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்படும்.
- பெண்களின் நலன் பாலின சமத்துவம் அணைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்புடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பற்தம் செய்திருக்கிறது.
- ஈரானுக்கு அவசியமின்றி இந்தியர்கள் செல்ல வேண்டாம் என வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.
- அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பின்புல தகவல்களாக ”மாணவர்கள் மீது வழக்கு எதுவும் உள்ளதா? தாய் தந்தையார் சிறையில் உள்ளனரா? அகதிகளா?” உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.







