Connect with us

இந்தியா

நீதிமன்ற செய்திகள் – 28.12.2025

Published

on

  1. இன்று முதல் ஒவ்வொரு ஞாயிறு மாலையும் உங்கள் கவனத்திற்கு உங்களை நாடி வருகிறது நீதிமன்ற செய்திகள்.
  2. சாட்சிகள் விசாரணையை காணொலிகாட்சி மூலமாக விசாரிக்கலாம். உரிய விசாரணை அதிகாரிகள் மருத்துவ நிபுணர்கள் பிற அரசு அலுவலர்கள் தங்கள் அலுவலகத்திலிருந்தே சாட்சியம் அளிக்கலாம். என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
  3. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாவிட்டால் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் சிறையில் அடைக்க வேண்டும். என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
  4. விசாரணை என்ற பெயரில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து துன்புறுத்துவதை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
  5. இந்து திருமண சட்டம் பிரிவு 5(3) ன் படி ஆணுக்கு 21ம் பெண்ணுக்கு 18ம் திருமண வயது. மீறி நடந்தால் கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவர் திருமணம் செல்லாது என அறிவிக்கக் கோரலாம். அதே நேரத்தில் திருமணத்தின் போது பெண்ணுக்கு 17 வருடம் 10 மாதம். எனவே திருமணம் செல்லாது என கணவனின் பெற்றோர் தன் மகன் இறந்த பிறகு மனு தாக்கல் செய்ய முடியாது. எனவே மனைவி சட்டப்படி மனைவி ஆவார். – அலகாபாத் உயர்நீதி மன்றம் உத்தரவு.
  6. தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்த பெண்ணை திருமணம் செய்த நபரை குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட தீர்ப்பையும் அவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
  7. குழந்தையின் இயற்கை பாதுகாவலர் தந்தை ஆவார். மனைவி இறந்த பிறகு திருமணம் செய்து இருந்தாலும் குழந்தையை வளர்க்கும் உரிமை தந்தைக்கு உண்டு. தாய்வழி தாத்தா பாட்டி குழந்தையை தந்தையிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு.
  8. குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 125ன் கீழ் ஜீவனாம்ச வழக்குகளைக் காரணம் காட்டி கணவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க குடும்ப நல நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை. என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  9. கணவரிக் பெற்றோரை பிசாசுகள் முட்டாள்கள் மற்றும் தீயவர்கள் என்று திட்டியது மட்டுமல்லாமல் தன் மகளை பல மாதங்களாக அவர்களிடமிருந்து விலக்கி வைத்திருந்து விட்டு  கணவர் விவாகரத்து கோரி மன தாக்கல் செய்த போது பிள்ளைகள் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்த கல்லூரி பேராசிரியை ஒருவர் தற்போது மகளை தன்னிடமே ஒப்படைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை பெங்களுரு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
  10. கணவனோ வாரிசுகளோ இல்லாமல் திருமணமான பெண் இறந்தால் அவர் பெயரிலுள்ள சொத்து கணவன் குடும்பத்தை சேர்ந்த வாரிசுகளுக்குத் தான் செல்ல வேண்டுமே தவிர அந்த பெண்ணின் பெற்றோர் குடும்ப வாரிசுகளுக்கு அல்ல.- உச்ச நீதிமன்ன்றம் அதிரடி.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Yachttogo discover luxury.