இந்தியா
செங்கோட்டையன் ராஜகுருவாக இருப்பாரா? அல்லது இரண்டாமிடத்திலிருற்து செல்லாக்காசாகிப் போவாரா?

அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட முன்னால் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அதற்கு முன் தனது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரதஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துவிட்டு வந்தார்.
அவருடன் முன்னால் எம்பி சத்யபாமா முன்னால் எம்எல்ஏக்கள் வெங்கடாசலம் முத்துக்கிருஷ்ணன் புதுச்சேரி முன்னால் எம்எல்ஏக்கள் சாமிநாதன் அசனா ஆகியோர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் தவெகவில் இணைந்து உறுப்பினர் அடையாள அட்டைகளை விஜயிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது எம்ஜிஆரால் அடையாளம் காணப்பட்டவன் நான். எம்ஜிஆர் மறைந்த பிறகு 1987ல் ஜெயலலிதா வழியில் பயணத்தை மேற்கொண்டேன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மூன்று பிரிவாய் போன அதிமுக ஒன்றாகிட முயற்சிகளை மேற்கொண்டேன். 2026ல் மாபெரும் புரட்சி ஏற்பட்டு விஜய் தமிழ்நாடு முதல்வராவார். என்று கூறினார்.
வலிமை மிக்க பேரரசர்களாக இருந்தாலும் எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக்கூடாது என்ற மன்னர்களுக்கு ஆலோசனை கூறிட ராஜகுருக்கள் இருப்பார்கள். செங்கோட்டையனும் தவெகவிவ் அப்படி ஒரு ராஜகுருவாக இருப்பார் என்று ஆரூடங்கள் கூறுகின்றன.
அரசியல் வழித்தடத்தில் தவெக ஒரு குழந்தை என்ற சொல்லப்பட்டாலும் அக்கட்சியின் மிகப்பெரிய பலமாக அணைவரும் நினைப்பது விஜய் ரசிகர்களைத்தான். விஜயகாந்திற்கு ஒரு பண்ருட்டி ராச்சந்தின் இருந்தது போல் விஜய்க்கு செங்கோட்டையன் இருப்பார் என்று எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.
செங்கோட்டையனின் அரசியல் பயணத்தில் அவர் டிக்கெட் வாங்கியது ஒரு ஊருக்கு. ஆனால் இறங்கியது வேறு ஒரு ஊரில். கடலில் அலைக்கழிக்கப்பட்ட படகாக தவெக பக்கம் கரை ஒதுங்கிஙிருக்கிறார் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
அதிமுக சார்பில் தேர்தலில் நின்றபோது ஒவ்வொரு வீடாக சென்று ஓட்டுக் கேட்ட செங்கோட்டையன் அந்த எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தபோது யாரைக் கேட்டு ராஜினாமா செய்தார் என்ற கேட்கிறார்கள் பொதுமக்கள்.
நெடுஞ்செழியனைப் போல ஓபிஎஸ்ஸைப் போல இரண்டாமிடத்திலிருந்து செல்லாக்காசாகப் போகிறார் என்றும் கூறுகின்றனர். கொங்கு கோட்டையில் செய்கோட்டையன் கோலோச்ச முடியாதவாறு கடமைகளைச் செய்யுங்கள் என்று எடப்பாடியார் தனது தொண்டர் படைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
அதிமுக காற்றில் கரைந்து கொண்டிருக்கும் கற்புரமாகிக் கொண்டிருக்கிறதா? தவெக தட்டு தடுமாறிக் கொண்டிருக்கிறதா செங்கோட்டையன் ராஜகுருவா செல்லாக்காசா என்பது ஏப்ரல் மாதக் கடைசியில்தான் தெரியும்.
