ஆன்மீகம்
அன்னை துர்க்கையின் அருளைப் பெறும் 5 அதிர்ஷ்ட ராசிகள்!

இந்து மதத்தில் மிக முக்கிய பண்டிகையாகக் கொண்டாடப்படும் நவராத்திரி, அன்னை துர்க்கையின் ஒன்பது அவதாரங்களை வழிபடும் ஒன்பது இரவுகளைக் குறிக்கிறது. இந்த ஆண்டு நவராத்திரி செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2, 2025 வரை நடைபெறுகிறது. இந்நேரத்தில் பக்தர்கள் துர்க்கையின் அருளைப் பெற வழிபாடுகள் செய்வதோடு, சில ராசிக்காரர்கள் இயல்பிலேயே துர்க்கையின் அருளைப் பெற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
இந்த ராசிக்காரர்களுக்கு அன்னை துர்க்கை வீரம், தைரியம், தன்னம்பிக்கை மற்றும் பிரச்சனைகளை கடக்க கூடிய ஆற்றலை அளிக்கிறார். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யாவென பார்க்கலாம்:
1. ரிஷபம் (Taurus)
ரிஷப ராசிக்காரர்கள் துர்க்கைக்கு மிக விருப்பமானவர்கள். ஷைலபுத்ரி மற்றும் மகா கௌரி தேவிகளின் வாகனமாகக் கருதப்படுவதால், இவர்கள் அன்னையின் அருளை அதிகமாகப் பெறுகின்றனர். தைரியம், தலைமைத்திறன், தன்னம்பிக்கை ஆகியவற்றில் சிறந்து விளங்குவர்.
2. கடகம் (Cancer)
சந்திர பகவான் கடக ராசியின் அதிபதி. துர்க்கையின் சந்திரகாந்தா வடிவத்தில் சந்திரன் முக்கிய பங்காற்றுவதால், கடக ராசிக்காரர்கள் துர்க்கையின் அருளைப் பெறுகின்றனர். கடின உழைப்பும் புத்திசாலித்தனமும் இவர்களின் பலம். எந்த சூழலிலும் தெளிவான முடிவெடுக்கத் தெரிந்தவர்கள்.
3. சிம்மம் (Leo)
சிம்மம் துர்க்கையின் வாகனமான சிங்கத்தின் அடையாளம். எனவே சிம்ம ராசிக்காரர்கள் துர்க்கைக்கு மிகவும் பிடித்தவர்கள். இவர்கள் இயல்பாகவே ஆற்றல், தைரியம், தலைமைப்பண்பு கொண்டவர்கள். துர்க்கையின் அருளால் அதிர்ஷ்டம் சேர்ந்து, பெரும் வெற்றிகளை அடைவார்கள்.
4. கன்னி (Virgo)
கன்னி ராசி பெண்களை குறிக்கும் ராசியாக இருப்பதால், துர்க்கைக்கு மிகவும் பிடித்தமானது. கன்னி ராசிக்காரர்கள் பகுத்தறிவு சிந்தனையுடன் சுறுசுறுப்பாக இருப்பவர்கள். தடைகள் வந்தாலும் முறியாமல் முன்னேறும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. துர்க்கையின் ஆசீர்வாதம் எப்போதும் இவர்களோடு இருக்கும்.
5. தனுசு (Sagittarius)
தனுசு ராசி குருவால் ஆளப்படும் ராசி. இவர்களின் சின்னமாக வில்-அம்பு உள்ளது. இது துர்க்கையின் முக்கிய ஆயுதங்களில் ஒன்றாகும். எனவே தனுசு ராசிக்காரர்களும் துர்க்கைக்கு மிகவும் பிடித்தவர்கள். தெளிவான சிந்தனையுடன் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளும் திறன் இவர்களுக்கு உண்டு. சிறந்த தலைவர்களாகவும் தொழிலில் சிறப்பானவர்களாகவும் உயர்வார்கள்.
