ஆன்மீகம்
சனி பகவானுக்கு பிடித்த ராசிகள் யாவை? இந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்களுக்கு சனி எப்போதும் அருள் புரிவார்!

சனி பகவான் மனிதர்களின் கர்மத்திற்கு ஏற்ப பலன்களை அளிப்பவர் என்பதால் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். பலர் சனியை அச்சத்துடன் நினைத்தாலும், நல்ல செயல்களைச் செய்பவர்களுக்கு அவர் எப்போதும் அருள்புரிகிறார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவானுக்கு சில ராசிகள் மிகவும் பிடித்தமானவை. அந்த ராசிக்காரர்களுக்கு சனி எப்போதும் அருள் புரிந்து, கண்ணின் இமை போல காத்து ரக்ஷிக்கிறார்.
சனி பகவானுக்கு பிடித்த ராசிகள்
1. ரிஷபம் (Taurus)
சனி பகவானின் அருளால், ரிஷப ராசிக்காரர்கள் மீது சனியின் அசுப விளைவுகள் குறைவாக இருக்கும். ஏழரை சனி அல்லது சனி பெயர்ச்சி காலங்களிலும் அதிக பாதிப்பு இருக்காது. இவர்களின் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி, செழிப்பு நிலைத்து இருக்கும்.
2. துலாம் (Libra)
துலா ராசியில் சனி உச்சமாக இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு எப்போதும் சனி அருள் இருக்கும். தங்கள் வாழ்க்கையில் பல தடைகளை கடந்து வெற்றியடைவார்கள்.
3. தனுசு (Sagittarius)
தனுசு ராசி குருவின் ஆட்சி ராசி. குருவும் சனியும் நட்பு கிரகங்களாக இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு சனியின் அருள் சிறப்பாக இருக்கும். திடீர் நிதி ஆதாயங்களும் கிடைக்கும்.
4. மகரம் (Capricorn)
மகர ராசியின் அதிபதி சனி என்பதால், இது அவரின் மிகவும் விருப்பமான ராசிகளில் ஒன்று. இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் செல்வம், மகிழ்ச்சி குறையாது.
5. கும்பம் (Aquarius)
கும்ப ராசிக்கும் சனி அதிபதி. எனவே சனி பெயர்ச்சி, ஏழரை சனி காலங்களிலும் இவர்களை சனி அதிகம் பாதிக்க மாட்டார். நிதி பிரச்சினைகள் எளிதில் தீர்ந்து வாழ்வில் நிலைத்தன்மை கிடைக்கும்.
சனி பெயர்ச்சி மற்றும் அதின் விளைவு
சனி பெயர்ச்சி நிகழும் போது, அவர் மூன்று கட்டங்களாக (விரய சனி, ஜென்ம சனி, பாத சனி) ஏழரை சனியாக சஞ்சரிக்கிறார். 2025 மார்ச் மாதத்தில் சனி கும்பத்திலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆனது, இந்த ஆண்டின் முக்கிய ஜோதிட நிகழ்வாகக் கருதப்படுகிறது.
சனி பகவானின் அருள் பெறுவது எப்படி?
சனி சாலிசா, அனுமான் சாலிசா, “நீலாஞ்ஜன சமாபாசம்…” போன்ற ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தால் சனியின் அருள் கிடைக்கும். ஏழை, எளியவர்கள், உழைப்பாளிகள் மீது சனி எப்போதும் கருணையுடன் அருள்புரிவார்.




